vodafone

வோடபோன் நிறுவனம், மிகவும் சவாலான விலையில் ரூபாய் 129 கட்டணத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிளானில் நாள் தோறும் இணையம் 1.5 ஜிபி வரை வழங்கப்படுகின்றது.

வோடபோன் தொலைதொடர்பு ஐடியா செல்லுலார் உடன் இணைந்து செயல்பட்டாலும் இரு நிறுவனங்களும் தனித்தனியான பிளான்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றது. சமீபத்தில் ரூ.509 பிளானில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த வோடபோன், தற்போது ரூ.119 மற்றும் ரூ.169 என இரு ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையில் ரூ.169 பிளானை ரூ.129 திட்டத்தில் அறிவித்துள்ளது.

வோடபோன் ரூ.129 ரீசார்ஜ் பிளான் சிறப்புகள் மற்றும் வேலிடிட்டி

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய திட்டம் ரூபாய் 129 பிளானில் உள்ள நன்மைகளை பற்றி தொடர்ந்து காணலாம். இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும்.

டேட்டா நன்மை : நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

வாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.

வேலிடிட்டி – 28 நாட்கள் செல்லுபடியாகும்.

கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் வோடபோன் பிளே சேவை வழங்கப்படுகின்றது. இதே டேட்டா நன்மையை ரூ.169 பிளானிலும் இதே சலுகையை வோடபோன் வழங்கி வருகின்றது என்பதனை அறிந்திருக்கலாம்.

ஜியோ ரூ.149

ஜியோ ரூபாய் 149 கட்டணத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. கூடுதலாக ஜியோ ஆப்களை இலவசமாக பெறலாம்.