Categories: Telecom

ரூபாய் 129க்கு நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன்

Share

வோடபோன் நிறுவனம், மிகவும் சவாலான விலையில் ரூபாய் 129 கட்டணத்தில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த பிளானில் நாள் தோறும் இணையம் 1.5 ஜிபி வரை வழங்கப்படுகின்றது.

வோடபோன் தொலைதொடர்பு ஐடியா செல்லுலார் உடன் இணைந்து செயல்பட்டாலும் இரு நிறுவனங்களும் தனித்தனியான பிளான்களை தொடர்ந்து அறிவித்து வருகின்றது. சமீபத்தில் ரூ.509 பிளானில் மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த வோடபோன், தற்போது ரூ.119 மற்றும் ரூ.169 என இரு ரீசார்ஜ் திட்டங்களுக்கு இடையில் ரூ.169 பிளானை ரூ.129 திட்டத்தில் அறிவித்துள்ளது.

வோடபோன் ரூ.129 ரீசார்ஜ் பிளான் சிறப்புகள் மற்றும் வேலிடிட்டி

சென்னை மற்றும் தமிழ்நாடு வட்டத்தில் வழங்கப்பட்டுள்ள புதிய திட்டம் ரூபாய் 129 பிளானில் உள்ள நன்மைகளை பற்றி தொடர்ந்து காணலாம். இந்த ரீசார்ஜ் பிளானின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும்.

டேட்டா நன்மை : நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகின்றது.

வாய்ஸ் கால் – வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளிமாநில எண்கள் மற்றும் ரோமிங் சமயத்தில் வழங்கப்படுகின்றது. ஆனால் வர்த்தகரீதியான அழைப்பு பயன்பாட்டுக்கு ஏற்றதல்ல.

வேலிடிட்டி – 28 நாட்கள் செல்லுபடியாகும்.

கூடுதல் நன்மையாக இந்த திட்டத்தில் வோடபோன் பிளே சேவை வழங்கப்படுகின்றது. இதே டேட்டா நன்மையை ரூ.169 பிளானிலும் இதே சலுகையை வோடபோன் வழங்கி வருகின்றது என்பதனை அறிந்திருக்கலாம்.

ஜியோ ரூ.149

ஜியோ ரூபாய் 149 கட்டணத்தில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. கூடுதலாக ஜியோ ஆப்களை இலவசமாக பெறலாம்.

Published by
R.Rajalakshmi
Tags: Vodafoneவோடபோன்

Recent Posts

  • Telecom

5 மாத இலவச டிவி சேனல்களை வழங்கும் D2h டிடிஎச் பிளான் விபரம்

பயனாளர்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்யும் டிடிஎச் மற்றும் கேபிள் டிவி புதிய விதிமுறைகளை தொடர்ந்து , பல்வேறு திட்டங்களை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்… Read More

2019-03-25 19:40 IST
  • Telecom

பிஎஸ்என்எல் மின் இணைப்பு துண்டிக்கப்படுமா .?

நாட்டின் பொதுத்துறை டெலிகாம் நிறுவனமான, பிஎஸ்என்எல் கடுமையான நிதி நெருக்கடியின் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மின் கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்பு… Read More

2019-03-25 13:15 IST
  • Telecom

டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை காணலாம்

இந்தியாவின் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 2019 போட்டிகளை தொலைக்காட்சிகளில் இலவசமாக கண்டு மகிழ டாடா ஸ்கை ஏர்டெல் டிஜிட்டல் டிவி என இரு நிறுவனங்களும் ஐபிஎல்… Read More

2019-03-24 09:32 IST
  • Apps

வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்

பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தில், செய்தியை ஃபார்வோடிங் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலிக்கு வலைதள யூஆர்எல்-களின் ஷாட்லிங்க் வசதி போன்றவற்றை… Read More

2019-03-23 18:02 IST
  • Apps

ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி அறிமுகம்

ஆப்பிள் ஐபோனில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வணிகரீதியான பிஸ்னஸ் செயலி… Read More

2019-03-23 17:14 IST
  • Telecom

பிஎஸ்என்எல் ஐபிஎல் 2019 டேட்டா ரீசார்ஜ் பிளான் ஆஃபர்

இன்றைக்கு தொடங்க உள்ள ஐபிஎல் 2019 எனப்படுகின்ற இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு பி.எஸ்.என்.எல் டெலிகாம் நிறுவனம், பிஎஸ்என்எல் ஐபிஎல் 2019 டேட்டா இரண்டு… Read More

2019-03-23 08:34 IST