vodagfone india offer

28 நாட்கள் செல்லுபடியாகின்ற வரம்பற்ற அழைப்புகள் வழங்கும் வோடபோன் ரூ.139 ரீசார்ஜ் பிளானில் உள்ள சிறப்புகளுடன், இந்நிறுவனம் ரூ.200 க்குள் பல்வேறு பிளான்களை தனது வாடிக்கையாளர்களுக்கு செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக ரூ.119, ரூ.129, ரூ.169 மற்றும் ரூ.198 உட்பட தற்போது புதிதாக வந்துள்ள ரூ.139 என இந்த ரீசார்ஜ் திட்டங்கள் வோடபோனின் ஒவ்வொரு தொலைத் தொடர்பு வட்டங்களில் மாறுபட்ட பலன்களை வழங்கி வருகின்றது.

சமீபத்தில் இந்நிறுவனம் வருடம் முழுவதும், அதாவது 365 நாட்கள் செல்லுபடியாகின்ற திட்டத்தினை ரூ.999 கட்டணத்தில் வரம்பற்ற அழைப்புகள் உள்ளூர், வெளியூர் உட்பட ரோமிங் சமயத்திலும் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் 12ஜிபி டேட்டா மட்டும் வழங்கப்படுகின்றது.

வோடபோன் ரூ.139 ரீசார்ஜ் பிளான்

இந்தியாவின் முதன்மையான வோடபோன் ஐடியா கூட்டு நிறுவனம், வோடபோன் தனது பயனாளர்களுக்கு ரூபாய் 139 கட்டணத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டு அளவில்லா வாய்ஸ் கால்ஸ், 5GB டேட்டா வழங்கப்பட்டு 2G/3G/4G தொலைத்தொடர்பில் பெற்றுக் கொள்ளலாம்.

வோடபோனின் ரூ.119 கட்டணத்தில் 1ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் 28 நாட்களுக்கு வழங்குகின்றது. ரூ.169 கட்டணத்தில் உள்ள மற்றொரு பிளானில் தினமும் 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் வழங்குகின்றது.

ரூ.999 ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 365 நாட்களுக்கு அதிகபட்சமாக 12 ஜிபி டேட்டா மட்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வரம்பற்ற முறையில் உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம்.