ரூ.154க்கு 6 மாத வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ இன்ஃபோகாம் நிறுனத்தால் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும், வோடபோன் இந்தியா நிறுவனம் ரூ.154 கட்டணத்தில் 6 மாதம் அல்லது 184 நாட்கள் செல்லுபடியாகின்ற ப்ரீபெய்டு வோடபோன் ரீசார்ஜ் ஆஃபரை அறிவித்துள்ளது.

வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

இன்கம்மிங் அழைப்புகளை பெற விரும்பும் பயனாளர்களுக்கு ஏற்ற திட்டங்களை வோடபோன் இந்தியா நிறுவனம் தொடர்நது அறிமுகப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் வோடபோன் மற்றும் ஐடியா செல்லுலார் பயனாளர்களுக்கு ரூ.24 கட்டணத்தில் 28 நாட்கள் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் பிளானை அறிவித்திருந்தது. இந்த திட்டத்தில் உள்ளூர் ற்றும் வெளி மாநில அழைப்புகள் இரவில் மட்டும் குறைந்த அளவில் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக இந்நிறுவனம், ஒரு வாடிக்கையாளரின் சராசரி வருமானத்தை உயர்த்தும் நோக்கில் சில திட்டங்களை செயற்படுத்தி வருகின்றது. குறிப்பாக நீண்ட காலமாக ரீசார்ஜ் செய்யாத பயனாளர்களின் இன்கம்மிங் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இங்கே குறிப்பிடதக்கதாகும்.

ரூ.154க்கு 6 மாத வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

வோடபோன் ரூ.154

வோடபோன் பயனாளர்கள், தங்களது நெட்வொர்கில் இருந்து இன்கம்மிங் கால்களை தவிர்த்து வெளியேறுவதனை தடுக்க 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.154 ரீசார்ஜ் செய்யும் வகையிலான நோக்கில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் கிடைக்கின்ற ரூ.154 ரீசார்ஜ் பிளானில், எவ்விதமான டாக்டைம் கட்டணமும் வழங்கப்படவில்லை. ஆனால் உள்ளூர் வோடபோன் டூ வோடபோன் பயனாளர்களுக்கு இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை 600 நிமிட இலவச அழைப்பை மொத்த வேலிடிட்டி காலத்துக்கு வழங்குகின்றது. இதை தவிர மற்ற நெட்வொர்க் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு 2.5 பைசா கட்டணமாக ஒரு விநாடிக்கு வசூல் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளது.

ரூ.154க்கு 6 மாத வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

டேட்டா விபரம்

டேட்டா முறைக்கு 10KB அளவிற்கு 4 பைசா கட்டணம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு எம்பி டேட்டா பெற்றால் ரூ.4 செலுத்த வேண்டும். ரோமிங்கில், டேட்டா விகிதம் 10KB அளவிற்கு 10 பைசாவாகும், ஒரு எம்பி டேட்டா 10 ரூபாயாக இருக்கும்.

இந்த பிளானில்  ஒவ்வொரு உள்ளூர் எஸ்எம்எஸ் கட்டணம் ரூ. 1 வசூலிக்கப்படும் வெளி மாநிலங்களுக்கான எஸ்எம்எஸ் ரூ. 1.50 வசூலிக்கப்படும்  இந்த பிளானில் டாக்டைம் வழங்கப்படுவதில்லை.

ரூ.154க்கு 6 மாத வேலிடிட்டி வழங்கும் வோடபோன் ரீசார்ஜ் ஆஃபர்

யாருக்கு இந்த பிளான் ?

இன்கம்மிங் கால்களுக்கு மட்டும் வோடபோன் எண்களை பயன்படுத்துகின்ற பயனாளர்களை குறிவைத்து இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு நெட்வொர்க் மாற விரும்பாமல் கூடுதலாக இரண்டாவது சிம் கார்டினை (ஜியோ) டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு பயன்படுத்தும் பயனாளர்களை குறிவைத்து வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, இதன் காரணமாக மீண்டும் டாக்டைம் பிளான்களை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளது.