வோடபோன் நிறுவனம், சிறப்பு ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்ற நிலையில், புதிதாக ரூ.16 கட்டணத்தில் 24 மணி நேரம் மட்டும் செல்லுபடியாகும் வகையில் அறிவித்துள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தில் எந்த கால் நன்மையும், எஸ்எம்எஸ் ஆஃபரும் வழங்கப்படவில்லை. முன்பாக ரூ.999 கட்டணத்தில் ஒரு வருடம் செல்லுபடியாகின்ற ரீசார்ஜ் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
வோடபோன் 16 ரூபாய் ரீசார்ஜ் பிளான்
ரூபாய் 16க்கு வழங்கியுள்ள சிறப்பு ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் 1ஜிபி டேட்டா ஒரு நாள் மட்டும் 2G/3G/4G முறையில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் டாக்டைம் சலுகைகள் வழங்கப்படவில்லை.
மேலும் ரூபாய் 999 ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் பயனாளர்கள் 365 நாட்களுக்கு அதிகபட்சமாக 12 ஜிபி டேட்டா மட்டும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வரம்பற்ற முறையில் உள்ளூர் மற்றும் வெளி மாநில அழைப்புகள், இலவச ரோமிங் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளலாம். இந்த பிளானின் மொத்த டேட்டா பயன் 12 ஜிபி மட்டும் வழங்கப்பட்டுள்ளது.