வோடபோன் ரூ.1999 கட்டணத்தில் வெளியிட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 1.5 ஜிபி டேட்டா சலுகையை 365 நாட்களுக்கு அறிவித்துள்ளது. கூடுதல் நன்மையாக அளவில்லா அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகின்றது.

பெரும்பாலான டெலிகாம் நிறுவனங்கள் வருடாந்திர பிளான்களை வெளியிடுவதில் தீவரமாக செயல்பட்டு வருகின்றது. குறிப்பாக வோடபோன் நிறுவனத்தின் இரண்டாவது வருடாந்திர பிளானாகும். இதற்கு முன்பாக ரூ.1,699 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மையை வழங்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை வெளியிட்டிருந்தது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ரீசார்ஜ் திட்டமான ரூ.1999 பிளானில் பயனாளர்களுக்கு கிடைக்க உள்ள நன்மை பற்றி அறியலாம். தினமும் அதிகபட்ச உயர்வேக டேட்டா 1.5 ஜிபி, அளவில்லா உள்ளூர் மற்றும் வெளிமாநில அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை 365 நாட்கள் செல்லுபடியாகின்ற வகையில் வெளியிட்டுள்ளது.

இந்த பிளானில் மொத்தமாக பயனாளர்களுக்கு 547.5 ஜிபி டேட்டா நன்மை மொத்தமாக 36500 எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறுவார்கள். முதற்கட்டமாக கேரளா வட்டத்தில் கிடைக்க தொடங்கியுள்ள இந்த திட்டம் விரைவில் அனைத்து வட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

ஜியோ 1699

ஜியோ நிறுவனம் ரூ.1699 கட்டணத்தில் செயற்படுத்தி வரும் பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு முறையுடன்,  தினமும் 100 எஸ்எம்எஸ் என செயற்படுத்துகின்றது.

ஏர்டெல் 1699

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.1699 கட்டணத்தில் செயற்படுத்தி வரும் பிளானில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு முறை, தினமும் 100 எஸ்எம்எஸ் என செயற்படுத்துகின்றது.