vodafone

இந்தியாவின் மிகப்பெரிய வோடபோன் ஐடியா டெலிகாம் நிறுவனத்தின், வோடபோன் ரூ.229 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கும் ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை தமிழகம் உட்பட பெரும்பாலான வட்டங்களில் வெளியிட்டுள்ளது.

ரூ.209 கட்டணத்தில் வோடபோன் வழங்குகின்ற நாள் ஒன்றுக்கு 1.6 ஜிபி டேட்டா திட்டத்தை விட ரூ.20 கூடுதல் கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 400 எம்பி டேட்டாவை கூடுதலாக வழங்குகின்றது.

வோடபோன் 229 ரீசார்ஜ் ஆஃபர்

ஜியோ நிறுவனம், 28 நாட்கள் செல்லுபடியாகின்ற பிளானில் ரூ.198 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. தற்போது வோடபோன் செயற்படுத்தியுள்ள ரூ.229 ரீசார்ஜ் பிளான் நன்மைகளை பற்றி முழுமையாக அறிந்து கொள்ளலாம்.

ரூ.229 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை, 4G/ 3G வேகத்தில் பெறுவதுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் , வெளிமாநில அழைப்புகள் வரம்பற்ற முறையில் வழங்கப்படுகின்றது. இதுதவிர வோடபோன் பிளே ஆப் சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. இதன் காரணமாக லைவ் டிவி, மூவீஸ் உட்பட பல்வேறு சேவைகளை பெற இயலும்.