vodagfone india offer

வரம்பற்ற அழைப்புகளை வழங்கும் சிறப்பு ரீசார்ஜ் ஆஃபரை வோடபோன் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொண்டு வந்துள்ளது. இந்த ஆஃபர் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு மிகுந்த சவாலாக அமைந்திருக்கும்.

ஜியோ நிறுவனமும், 3ஜிபி டேட்டா வழங்குகின்ற திட்டத்தை ரூ.299 கட்டணத்தில் வழங்கி வருகின்றது. இந்த ரீசார்ஜ் பிளான் வேலிடிட்டி 28 நாட்களாகும். போட்டியாளரான ஏர்டெல் நிறுவனம், 28 நாட்கள் வேலிடிட்டி பெற்ற ரூ.299 பிளானில் நாள் ஒன்றுக்கு 2.5ஜிபி டேட்டா சலுகையை வழங்குகின்றது.

வோடபோன் ரூ.299 பிளான் விபரம்

சமீபத்தில் வோடபோன் நிறுவனம், ரூ.229 ரீசார்ஜ் பிளானை வெளியிட்டிருந்தது. ரூ.229 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மை, 4G/ 3G வேகத்தில் பெறுவதுடன், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் , வெளிமாநில அழைப்புகள் வரம்பற்ற முறையில் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

தற்போது புதிதாக அறிவித்துள்ள ரூ.299 பிளான் முக்கியமாக நீண்ட வேலிடிட்டி முறையில் வரம்பற்ற அழைப்புகளை தேர்ந்தெடுக்கும் பயனாளர்களுக்கும், குறைந்த டேட்டாவை மட்டும் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் பொருந்தும்.

ரூ.299 கட்டணத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் மொதமாக 3 ஜிபி டேட்டா நன்மை, 4G/ 3G வேகத்தில் பெறுவதுடன், மொத்த டேட்டவை கடந்த பிறகு 1எம்பி டேட்டா கட்டணம் 50 பைசா ஆகும். மொத்தமாக 1000 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் , வெளிமாநில அழைப்புகள் வரம்பற்ற முறையில் வழங்கப்படுகின்றது.

இந்த பிளானின் வேலிடிட்டி காலம் 70 நாட்கள் ஆகும். கூடுதலாக இந்த பிளானில் டேட்டா விரும்பினால் ஆட் ஆன் டேட்டாபேக்குகளை பயன்படுத்தலாம். குறிப்பாக 6 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.98 பிளான் அல்லது ரூ.49 கட்டணத்தில் 3ஜிபி டேட்டா வழங்கும் பிளானில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம்.