தினமும் 1.4 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு ரூ.401 வோடபோன் பிளான்

வோடபோன் இந்தியா நிறுவனம், ரூ. 401 கட்டணத்தில் வெளியிட்டுள்ள ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தில் நாள்தோறும் 1.4 ஜிபி டேட்டா மற்றும் அளவில்லா வாய்ஸ் கால் ஆகியவற்றை வழங்குகின்றது.

வோடபோன் ரூ.401 பிளான் சிறப்புகள்

குறிப்பிட்ட சில பயனாளர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பட்டுள்ள செய்தி வாயிலாக தெரிய வந்துள்ள ரூ.401 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.4 ஜிபி உயர்வேக டேட்டா மற்றும் வரம்பள்ள உள்ளூர், வெளி மாநில அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் நாள்தோறும் வழங்குகின்றது. இந்த பிளானிற் வேலிடிட்டி காலம் 84 நாட்களாகும்.

தமிழ்நாடு வட்டத்தில் வழங்கப்படுகின்ற இந்த ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டம் குறிப்பிட்ட ஒரு சில பயனாளர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக கிடைக்க தொடங்கியுள்ளது. உங்களுக்கு இந்த சலுகை உள்ளதா என்பதனை அறிய வோடபோன் ஆப் அல்லது வோடபோன் இணையதளத்தில் பார்வையிடலாம்.

ஜியோ நிறுவனம் வழங்கி வருகின்ற ரூ.399 பிளானுக்கு ஈடுகொடுக்கம் வகையில் அமைந்துள்ளது. ரூ.399 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகள் ஜியோ செயலிகளின் நன்மை ஆகியவற்றை 84 நாட்களுக்கு வழங்குகின்றது.

மேலும் வோடபோன் இந்தியா நிறுவனம், சமீபத்தில் நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வழங்கும் 365 நாட்கள் செல்லுபடியாகின்ற ரூ.1999 ரீசார்ஜ் பிளானை வெளியிட்டுள்ளது. இந்த பிளானில் வரம்பற்ற அழைப்பு முறை உள்ளது.