ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்

வோடபோன் நிறுவனம் கடந்த வாரம் இரண்டு புதிய பிளான்களை தனது பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் பிளான்-ஐ யும் அறிவித்துள்ளது.

வோடபோன் பிரிப்பெய்டு வாடிக்கையாளர்களுக்காக 99 ரூபாயில் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடிகளை அளிக்கிறது. இந்த ரூ.99 பிளான், 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த பிளான் 4G டெலிகாம் சர்க்கிள்களுக்கு மட்டுமே. வோடபோன் 3G பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிளான் வசதிகளை பெற முடியாது.

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்

இதுமட்டுமின்றி வோடபோன் புதிதாக ரூ. 549 மற்றும் ரூ. 799 என இரண்டு பிளான்களை கடந்த வாரம் வெளியிட்டுள்ளது. 549 ரூபாய் பிளானில் நாள் ஒன்றுக்கு 3.5ஜிபி டேட்டா அளிக்கப்படும். இத்துடன் பயனாளர்கள் அன்லிமிடெட் கால் வசதியையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு பெறலாம்.

மற்றொரு புதிய பிளான் 799 ரூபாய் பிளானில், நாள் ஒன்றுக்கு 4.5 ஜிபி டேட்டா அளிக்கப்படும். இத்துடன் பயனாளர்கள் அன்லிமிடெட் கால் வசதியையும், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை 28 நாட்களுக்கு பெறலாம்.

Comments are closed.