வோடபோன் நிறுவனம் , பிஎஸ்என்எல், ஏர்டெல், ஜியோ, மற்றும் ஐடியா ஆகிய நிறுவனங்களில் 2ஜிபி டேட்டா திட்டத்துக்கு சவால் விடும் வகையில் ரூ.249 கட்டணத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை 28 நாட்களுக்கு வழங்குகின்றது.

வோடபோன் 249 ஆஃபர்

ரூ.249 முதல் ரூ.255 வரையிலான கட்டண மாறுபாட்டில் வட்டங்கள் வாரியாக வித்தியாசப்படும் 3ஜி மற்றும் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா என மொத்தம் 54ஜிபி டேட்டா , வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்பு நன்மைகளை வழங்குவதுடன், ரோமிங் சமயத்திலும் அழைப்புகளை இலவசமாக மேற் கொள்ளலாம்.

ஆனால் வரம்பற்ற அழைப்புகள் என்ற பெயரில் சொல்லப்பட்டாலும், அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் அல்லது வாரம் 1000 நிமிடங்கள் மட்டுமே இலவசமாக அழைப்புகளை வழங்குகின்றது.  மேலும் 300 எண்களுக்கு மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள இயலும்.

ஐடியா, ஏர்டெல் , பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் ரூ. 248 முதல் ரூ.251 வரையிலான கட்டண மாறுதலில் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகின்றது. ஜியோ நிறுவனம் ரூ.198 கட்டணத்தில் தினமும் 2ஜிபி டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகின்றது.