ரிலையன்ஸ் ஜியோ எதிரொலியின் காரணமாக வோடாபோன் நிறுவனம் வோடோபோன் சூப்பர்நெட்  4ஜி சேவையில் ரூ.250க்கு 4ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகின்றது. மேலும் ரூ.999 விலையில் 22ஜிபி 4ஜி டேட்டா இன்டர்நெட் வசதியை வழங்குகின்றது.

வோடோபோன் சூப்பர்நெட் 4ஜி டேட்டா ரூ.250க்கு 4 ஜிபி டேட்டா

தற்பொழுது சூப்பர்நெட் 4ஜி சேவை 17 தொலைதொடர்பு வட்டங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான கட்டணத்தில் 4ஜி சேவையை வழங்கும் வகையில் சிறப்பு டேட்டா பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வோடோபோன் சூப்பர்நெட் 4ஜி டேட்டா பேக் விபரம்

  • 1GB 4ஜி டேட்டா விலை ரூ. 150
  • 4GB 4ஜி டேட்டா விலை ரூ. 250
  • 6GB 4ஜி டேட்டா விலை ரூ. 350
  • 9GB 4ஜி டேட்டா விலை ரூ. 450
  • 13GB 4ஜி டேட்டா விலை ரூ. 650
  • 22GB 4ஜி டேட்டா விலை ரூ. 999
  • 35GB 4ஜி டேட்டா விலை ரூ. 1,500

வட்டங்களை பொருத்து விலை விபரத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம். இது குறித்து வோடோபோன் தெரிவிக்கையில் வாடிக்கையாளர்கள் உயர்தர சூப்பர்நெட் 4ஜி சேவை வழியாக சிறப்பான இணைய அனுபவத்தினை பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here