இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனம் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வரம்பற்ற டேட்டாவை ரூ. 6 கட்டணத்தில் ஒரு மணி நேரத்துக்கு வழங்குகின்றது.
வோடபோன் சூப்பர்நைட்
வோடபோன் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு இரவு நேர பிளானை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிளானை ரூ. 29 கட்டணத்தில் எந்த நேரமும் ஏக்டிவேட் செய்தாலும், ஆனால் இரவில் மட்டுமே பநன்படுத்தலாம். நள்ளிரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை நாள் ஒன்றுக்கு 5 முறை அதாவது ஒரு மணி நேரத்துக்கு வெறும் 6 ரூபாய் கட்டணத்தில் வரம்பற்ற 3ஜி மற்றும் 4ஜி டேட்டாவை வழங்குகின்றது.
இரவில் மட்டுமே வழங்கப்படுகின்ற இந்த சூப்பர்நைட் டேட்டா பேக்கை வாடிக்கையாளர்கள் இரவில் 5 முறையும் பயன்படுத்தலாம், ஒரு மணி நேரத்துக்கு ரூ. 6 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும்.
3ஜி மற்றும் 4ஜி என இரண்டிலும் பயன்படுத்தும் வகையில் டேட்டா வழங்கப்பட்டுள்ளதால் இரு பிரிவு பயனாளர்களும் சிறப்பான முறையில் பயன் பெறுவார்கள் என வோடபோன் தெரிவித்துள்ளது.
சூப்பர்நைட் பேக் ஏக்டிவேஷன் முறை ?
- *444*4# என்ற எண்ணுக்கு யூஎஸ்எஸ்டி வாயிலாக ஏக்டிவேட் செய்யலாம்.
- இதை தவிர ரீடெயிலர்கள் மற்றும் மற்ற வழியிலும் ரீசார்ஜ் செய்யலாம்.