இந்திய தொலைத்தொடர்பு துறையில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக விளங்கும் வோடபோன் நிறுவனம் 4ஜி டேட்டாவுடன் வரம்பற்ற அழைப்புகள் ஆகியவற்றை 7 நாட்களுக்கு ரூ.69 கட்டணத்தில் சூப்பர்வீக் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் சூப்பர்வீக் 69

வோடபோன் இந்தியா நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் ரூ.69 கட்டணத்தில் 7 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் மேலும் தினசரி பயன்பாட்டுக்கு 500 எம்பி டேட்டா வழங்குகின்றது.

வோடபோன் சூப்பர் வீக் திட்டம் ரூ.69 முதல் ரூ.73 வரை வட்டங்களை பொறுத்து கட்டணம் மாறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே உங்களது அருகாமையில் உள்ள மொபைல் ரீடெயிலர், மை வோடபோன் ஆப் மற்றும் யூஎஸ்எஸ்டி வாயிலாக ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

இந்த பிளான் அனைத்து வட்டங்களிலும் உள்ள வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வோடபோன் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 அல்ட்ரா மொபைல் போனுடன் இணைந்து சிறப்பு கேஸ்பேக் சலுகையை அறிவித்திருந்தது.