4ஜி சேவையில் அதிகரித்து வருகின்ற போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வோடஃபோன் டெலிகாம் நிறுவனம் புதிய வோடஃபோன் 344 டேட்டா பிளான் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வோடஃபோன் 344

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக விளங்கும் வோடஃபோன் தனது வாடிக்கையாளர்களுக்கு புதியதோர் சிறப்பு டேட்டா பிளானை அறிமுகம் செய்துள்ளது.

ரூ. 344 கட்டணத்தை கொண்டு வோடபோன் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும்போது தினசரி 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 4ஜி டேட்டா பெறுவதுடன் 2ஜி மற்றும் 3ஜி சிம் பயனாளர்களும் இந்த சலுகையை பெறலாம்.

இதுதவிர அழைப்புகளுக்கு 7 நாட்களுக்கு அதிகபட்சமாக 1200 நிமிடங்கள் வழங்கப்படுகின்றது. நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 300 நிமிடங்கள் வரை அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

1200 நிமிடங்கள் தீர்ந்த பிறகு வோடஃபோன் டூ  வோடஃபோன் பயனாளர்களுக்கு 10 பைசா கட்டணத்திலும் மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு 30 பைசா கட்டணத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

அதிகபட்சமாக ஒரு வாடிக்கையாளர் 300 விதமான எண்களுக்கு மட்டுமே இந்த சலுகையை பெற முடியும், அதேபோல திரும்ப திரும்ப ஒரே எண்ணுக்கு அழைப்பினை மேற்கொண்டாலும் மேலே வழங்கப்பட்டுள்ள அழைப்பு கட்டணத்தின் அடிப்படையில் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகையை பெற மை வோடபோன் ஆப் மற்றும் ரீடெயிலர்களிடம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிங்க ; ஜியோபோன் முன்பதிவு செய்வது எப்படி ?