ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றாக விளங்கும் வாட்ஸ்அப் ஆப்பினை , இந்தியாவின் பிரசத்தி பெற்ற ரிலையன்ஸ் ஜியோபோன் 4ஜி மாடலில் அறிமுகம் செய்வதற்கான பணிகளை வாட்ஸ்அப் துரிதப்படுத்தியுள்ளது.

ஜியோபோன் வாட்ஸ்அப்

ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது

4ஜி வோல்ட்இ சேவையில் முன்னணி வகித்து வரும் ஜியோ நிறுவனம் ரூ.1500 விலை மதிப்பில் இலவசமாக அறிமுகம் செய்துள்ள 4ஜி ரிலையன்ஸ் ஜியோபோன் மாடலை மோசில்லா கெய்ஓஎஸ் கொண்டு இயங்குகின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

2.4 அங்குல திரையை மட்டுமே கொண்டிருந்தாலும், இந்த மொபைலில் முன்னேற்பாடாக ஜியோ செயலிகளான ஜியோ ம்யூசிக், ஜியோ சினிமா உள்ளிட்ட அனைத்து ஜியோ நிறுவன ஆப்ஸ்கள் மற்றும் பிரசத்தி பெற்ற  ஃபேஸ்புக் செயிலியை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து , தற்போது வாட்ஸ்அப் செயலியை அறிமுகம் செய்வதற்கான முனைப்பில் உள்ளதாக வாட்ஸ்அப் தொடர்பான பல்வேறு மேம்பாடுகளை சோதனை நிலையில் வெளியிடும், WABetaInfo தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது

இந்த மொபைல் 512எம்பி ரேம் கொண்டு செயல்பட்டாலும் உள்ளடங்கிய மெமரி 8 ஜி.பி மற்றும் கூடுதலாக 64 ஜி.பி வரை நீட்டிக்க கூடிய  வகையில் மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்தலாம். நாள் முழுமைக்கும் மிக சிறப்பான வகையில் செயல்படும் வகையில் 2000mAh பேட்டரி கொண்டு ரிலையன்ஸ் ஜியோபோன் இயக்கப்படுகின்றது.

ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது ரிலையன்ஸ் ஜியோபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ்அப் அறிமுகமாகிறது