வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சியோமி வழங்கும் Mi ஃபேன் விழாவை கொண்டாடும் நோக்கில் ரூபாய் 1 விலையில் 20 சியோமி ரெட்மி நோட் 4 மொபைல்கள் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும் 40 Mi  பேன்ட்கள் மற்றும் 50 Mi பவர் பேங்க் விற்பனை செய்யப்பட உள்ளது.

ரூ.1க்கு சியோமி ரெட்மி நோட் 4 வாங்கலாம்.. எப்படி ?

Mi Fan Festival

 • ரூபாய் 1 விலையில்  சியோமி ரெட்மி நோட் 4 விற்பனை செய்யப்பட உள்ளது.
 • வியாழன் 6ந் தேதி காலை 10 மணிக்கு Mi.com ஆப் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது.
 • ரூ. 1 விலையில் 40 Mi  பேன்ட்கள் மற்றும் 50 Mi பவர் பேங்க் விற்பனை செய்யப்படும்.

வருகின்ற ஏப்ரல் 6ந் தேதி சியோமி நிறுவனத்தின் எம்ஐ பிராண்டின் ரெட்மி நோட் 4 மொபைலை ரூபாய் 1 விலையில் முதல் 20 வாடிக்கையாளர்களுக்கு காலை 10 மணிக்கு விற்பனை செய்ய உள்ளது. இது தவிர மதியம் 2 மணிக்கு  40 Mi  பேன்ட்கள் மற்றும் 10000mAh திறன் கொண்ட 50 Mi பவர் பேங்க் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும் பகல் 12 மணிக்கு சிறப்பு ரெட்மி 4ஏ ரோஸ் கோல்டு  வண்ணத்தில் ரூபாய் 5,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

மேலும் படிக்க – ரெட்மி  4ஏ மொபைல் விலை மற்றும் விபரம்

ரூ.1க்கு சியோமி ரெட்மி நோட் 4 வாங்கலாம்.. எப்படி ?

கேஸ்பேக் மற்றும் இஎம்ஐ சலுகைகள்

எஸ்பிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு எம்ஐ.காம் தளத்தில் 5 சதவீத கேஸ்பேக் சலுகையை பெற ரூபாய் 5000க்கு மேல் வாங்கும் பொழுது இந்த சலுகையை பெறலாம். அதிகபட்சமாக ரூபாய் 500 வரை கேஸ்பேக் சலுகை பெறலாம்.

மேலும் படிக்க – ரெட்மி நோட் 4 மொபைல் விபரம்

சிறப்பு சலுகைகள்

Mi.com தளத்தில் கூடுதலாக Mi ஆக்செரீஸ்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கப்படுகின்றது. 10,000mAh Mi பவர் பேங்க்,  Mi VR பிளே மற்றும் Redmi 3S பிரைம் கேஸ் போன்றவைகளுக்கு ரூபாய் 100 வரை சலுகைகள் கிடைக்கின்றது. மூன்றின் விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • 10,000mAh Mi பவர் பேங்க் ரூ. 1,299
 • Mi VR பிளே விலை ரூ. 999
 • Redmi 3S Prime சாஃப்ட் கேஸ் பிளாக் ரூ 349.

மேலும் ரூபாய் 200 சலுகை விலையில் கிடைக்கும் மாடல்கள் 20,000mAh Mi பவர் பேங்க், Mi பேன்ட் 1 மற்றும் Mi இன்-இயர் ஹெட்போன் ப்ரோ கோல்டு

 • 20,000mAh Mi பவர் பேங்க் ரூ. 2,199
 • Mi பேன்ட் Rs 999
 • Mi இன்-இயர் ஹெட்போன் ப்ரோ கோல்டு ரூ. 1,799.

ரூபாய் 500 சலுகை விலையில் Mi ஏர் ப்யூரிஃபையர் 2 விலை ரூ. 9,999.

ரூ.1க்கு சியோமி ரெட்மி நோட் 4 வாங்கலாம்.. எப்படி ?

மேலும் பல சிறப்பு விலை சலுகைகளை எம்ஐ.காம் தளத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here