அமெரிக்காவின் டெஸ்லா மின்சாரக் கார் நிறுவனத்தின் புதிய அறிமுகமாக ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் டெஸ்லா பவர்பேங்க் $45 (ரூ.2900) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெஸ்லா பவர்பேங்க்

எலான் மஸ்க் தலைமையில் செயல்படும் டெஸ்லா நிறுவனம் மின்சாரக் கார்கள் தயாரிப்பில் பிரசத்தி பெற்று விளங்குகின்ற இந்நிறுவனம் சமீபத்தில் ரோட்ஸ்டெர் ஸ்போர்ட்டிவ் கார் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் செமி டிரக் ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தியிருந்தது.

தற்போது யூஎஸ்பி, மைக்ரோ-யூஎஸ்பி, ஆப்பிள் லைட்னிங் இணைப்புகளுடன் சார்ஜ் செய்யும் வகையிலான 3,350mAh திறன் கொண்ட பவர்பேங்க் செல் இந்நிறுவனத்தின் கார்களான மாடல் எஸ் மற்றும் மாடல் எக்ஸ் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ள ஒற்றை 18650 செல் கொண்டு டெஸ்லா டிசைன் ஸ்டூடியோவின் சூப்பர்சார்ஜர் லோகோ உந்துதலில் வடிவமைக்கபட்டுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் அதிகார்வப்பூர்வ இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்கா சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.