3.50 லட்சம் சிம்கார்டுகளுடன் 500க்கு மேற்பட்ட ஐபோன்கள் மற்றும் 10 கணினிகள் என மிகப்பெரிய அளவில் க்ளிக்ஃபார்ம் (clickfarm) மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பலை தாய்லாந்து நாட்டில் கைது செய்துள்ளனர்.

க்ளிக்ஃபார்ம்

க்ளிக்ஃபர்ம் (Clickfarm) என்றால் இணையம் வழியாக இடம்பெறுகின்ற விளம்பரங்களில் போலியான க்ளிக்குகளை மேற்கொண்டு பணத்தை ஈட்டுவதற்கான வழியாகும்.

தாய்லாந்து நாட்டின் கம்போடியா நகரில் சீனாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிராமத்தைச் சேர்ந்த வாங் டாங், நியு பேங், மற்றும் நி வென்ஜின் ஆகிய மூவரும் 3,47,200 போலி சிம்கார்டுகளுடன், 474 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 10 க்கு மேற்பட்ட கணினிகளுடன் போலியான கணக்குகளை உருவாக்குவது மற்றும் விளம்பரங்களை க்ளிக் செய்வது என அதன் மூலம் இந்திய மதிப்பில் மாதம் ரூபாய் 95,000 வரை சம்பாதித்து வந்துள்ளனர்.

இதற்காக ஒரு மெட்டல் ராக்கில் வரிசையாக 474 மொபைல்கள் வரிசைய அடுக்கப்பட்டு அவைகள் 10 க்கு மேற்பட்ட கணினிகள் வாயிலாக இணைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான மொபைல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் ஐபோன் 4S, ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5C போன்றவை ஆகும். இதன் வாயிலாக 3,000,000 மேற்பட்ட பயன்படுத்தாக சிம்கார்டுகள் உள்பட மொத்தம் 3,47,200 சிம் கார்டுகளை கொண்டு வீசாட் போன்ற பிரபலமான சமூக வலைதளங்களில் போலியான கணக்குகள் மற்றும் பாட்ஸ்களை உருவாக்கி மிகப்பெரிய மோசடியில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இணையதளங்களில் மிகப்பெரிய சவாலாக அமைகின்ற பாட்ஸ் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தை முடங்கும் நிலைக்கு தள்ள காரணமாக அமைந்துள்ளது.