சீனாவின் 42 செயலிகளை பயன்படுத்த வேண்டாம் – மத்திய அரசு எச்சரிக்கை

Ads

வீசாட், ட்ரூகாலர், யூசி பிரவுசர், மீ கம்யூனிட்டி, மீ ஸ்டோர், ப்யூட்டி பிளஸ் நியூஸ்டாக் , யூசி நியூஸ் உட்பட மொத்தம் 42 சீனா மொபைல் ஆப்களை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் பயன்படுத்த வேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

சீன ஆப்களுக்கு தடை

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் சீன மொபைல் நிறுவனங்கள் உட்பட சீனாவைச் சேர்ந்த ஆப்களின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதுபோன்ற சீன தயாரிப்பு ஆப்களை பயன்படுத்தும் பயனாளர்களின் விபரத்தை சீனாவில் உள்ள செர்வர்களுக்கு பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், இதுபோன்ற செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ராணுவ வீரர்கள், ராணுவ அதிகாரிகள் பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு நீக்க எச்சரிக்கும் 42 செயலிகளும் ஆங்கிலத்தில் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. அதன் விபரம் பின் வருமாறு :- Weibo, WeChat, SHAREit, Truecaller, UC News, UC Browser, BeautyPlus, NewsDog, VivaVideo- QU Video Inc, Parallel Space, APUS Browser, Perfect Corp, Virus Cleaner (Hi Security Lab), CM Browser, Mi Community, DU recorder, Vault-Hide, YouCam Makeup, Mi Store, CacheClear DU apps studio, DU Battery Saver, DU Cleaner, DU Privacy, 360 Security, DU Browser, Clean Master – Cheetah Mobile, Baidu Translate, Baidu Map, Wonder Camera, ES File Explorer, Photo Wonder, QQ International, QQ Music, QQ Mail, QQ Player, QQ NewsFeed, WeSync, QQ Security Centre, SelfieCity, Mail Master, Mi Video call-Xiaomi, QQ Launcher.

மேலே வழங்கப்பட்டுள்ள செயலிகளை பயன்படுத்தும் நபர்கள் முடிந்தவரை இவற்றை தவிர்த்தால் தனிநபர் தகவல்கள் திருடப்படாமல் பாதுகாக்கலாம்.

 

Comments

comments