டிக்டாக் டவுன்லோட்

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருக்கும் டிக் டாக் செயலி பிரபலமான ஏபிகேமிரர் இணையதளத்தில் தரவிறக்கம் செய்வோர் எண்ணிக்கை 12 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதிகார்வப்பூர்வ கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் நிறுவன ஆப் ஸ்டோரில் இருந்து வீடியோ பகிரும் வசதியைக் கொண்ட டிக் டாக் செயலி உச்ச நீதி மன்ற தடையை தொடர்ந்து நீக்கப்பட்டது.

டிக்டாக் டவுன்லோட் செய்வது எப்படி ?

பிரசத்தி பெற்ற ஆப் தரவிறக்க தளமான APKMirror மூலம் டிக் டாக் செயலி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. இந்தியாவின் கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் நீக்கப்பட்டிருந்தாலும், மற்றபடி ஏபிகே வகையில் ஆப்கள் வழங்கப்படும் தளங்களில் தொடர்ந்து தற்போது கிடைக்கிறது.

பாதுகாப்பான ஏபிகே வகையில் ஆப்களை வழங்கும் ஏபிகேமிரர் வலைதளத்தில், கடந்த சில நாட்களாக டிக் டாக் செயலி தரவிறக்குவோர் எண்ணிக்கை தடைக்கு முந்தைய நாட்களை விட 10-15 சதவிகிதம் வரை அதிரித்துள்ளதாக இதன் நிறுவனர், ஆர்டெம் ரஸாகோவ்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது தொடர்ந்து டிக் டாக் ஆப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இனி அரசு டிக் டாக் வலைதளத்தின் சர்வரை இந்தியாவில் நிரந்தரமாக முடக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகின்றது.