சரிந்த ஐபோன் விற்பனை குறித்து ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்

பிரசத்தி பெற்ற கேட்ஜெட்ஸ் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் விற்பனை சரிவடைந்துள்ளதால், ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது ஊழியர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதியிருக்கிறார்.

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் விற்பனை பெருமளவு சரிந்திருந்தாலும், இந்நிறுவனத்தின் ஐபேட், மேக் கனிணி , கைகளில் அனியும்  சாதனங்கள்,  போன்வற்றின் விற்பனை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிள் முதலீட்டாளர்களுக்கு ஆப்பிள் சார்பில் டிம் குக் அவர்களால் எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில் 2018 ஆம் ஆண்டு விடுமுறை காலாண்டு வாக்கில் ஆப்பிள் வருவாய் கணிப்பு விற்பனை குறைவின் காரணமாக மாற்றப்படுவதாக தெரிவித்திருக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் ஐபோன்களின் விற்பனை சரிந்தது தான், குறிப்பாக சீன சந்தையில் ஐபோன் விற்பனை பெருமளவு குறைந்திருக்கிறது.
சரிந்த ஐபோன் விற்பனை குறித்து ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்
காலாண்டில் வருவாய் கணிப்பு ஐபோன் வாயிலாக குறைந்திருப்பது பின்னடைவாக இருந்தாலும், நமது சேவைகள், அணியக்கூடிய சாதனங்கள் மற்றும் மேக் கனிணி வணிகம் மூலம்  வரலாற்று சிறப்புமிக்க வருவாய் மற்றும் ஐபேட் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இருமடங்கு அதிகரித்து இருக்கிறது.
இதேபோன்று ஐபோன் விற்பனை அமெரிக்கா மற்றும் கனடாவில் கிறிஸ்துமஸ் தின சாதனையை முறியடித்திருக்கிறது. இதேபோன்று அமெரிக்கா, கனடா, மெக்சிகோ, மேற்கு ஐரோப்பா, ஜெர்மனி, இத்தாலி, மற்றும் கொரியா, வியட்நாம் போன்ற ஆசிய பசிபிக் பகுதிகளில் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
புதிய ஐபோன்களின் மூலம் நமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கண்டுபிடிப்புகளால் நம்மால் பெருமை கொள்ள முடியும். இதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் முதல் காலாண்டில் ஐபோன்கள் விற்பனையில் சாதனை படைக்காததற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
வெளிப்புற சூழல் நமக்கு மிகுந்த அழுத்தம் தரலாம், எனினும் அவற்றை நாம் விலக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்த நிலை மாறும் வரை நாம் காத்திருக்கவும் கூடாது. இந்த சூழல் நாம் கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும், நம் பலத்தை ஒன்று திரட்டி ஆப்பிள் நிறுவன குறிக்கோளை நிலைநிறுத்தவும் ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. என இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சரிந்த ஐபோன் விற்பனை குறித்து ஊழியர்களுக்கு டிம் குக் கடிதம்