அடுத்த சில நாட்களில் மலர காத்திருக்கும் 2018 வருடத்திற்கு முன்பாக நிறைவடைய உள்ள 2017 ஆம் ஆண்டின் மிக மோசமான 10 பாஸ்வோர்டுகள் பற்றி தொடர்ந்து காணலாம்.

மோசமான டாப் 10 பாஸ்வோர்டுகள்

ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் சர்வதேச அளவில் பாஸ்வோர்டுகள் மீதான எண்ணம் மட்டும் தொடர்ந்து மாறாமலே இருந்து வருகின்றது. குறிப்பாக மிக இலகுவான பாஸ்வோர்டுகளை நினைவில் கொள்ளும் வகையில் பலரும் 12345678 என்ற வரிசை எண்ணை தேர்ந்தெடுப்பது தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஸ்பிளாஷ்டேட்டா ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

ஸ்பிளாஷ் டேட்டா ஆய்வறிக்கையில் 12341234, iloveyou, monkey, starwars, hello, whatever, மற்றும் trustno1 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

2017 ஆம் ஆண்டின் மோசமான பாஸ்வோர்டுகளில் டாப் 10 கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

1. 123456

2. password

3. 12345678

4. qwerty

5. 12345

6. 123456789

7. letmein

8. 1234567

9. football

10. iloveyou

மேலும் 100 வது இடத்தில் thunder  என்ற பாஸ்வோர் இடம்பபெற்றுள்ளது. முழுமையான 100 பாஸ்வோர்டுகளை பற்றி அறிய இங்கே க்ளிக் செய்யவும்.   https://13639-presscdn-0-80-pagely.netdna-ssl.com/wp-content/uploads/2017/12/Top-100-Worst-Passwords-of-2017a.pdf

பாதுகாப்பான கடவுச்சொற்கள்

பாஸ்வோர்டுகளை வைப்பதற்கு முன்பாக எளிதில் நினைவு கொள்ளும் வகையில் வைப்பதனை விட மிக கடுமையான எண் மற்றும் எழுத்து கலவைகளை (எடுத்துக்காட்டு – F”c?6XD7a>Dky*v# ) கொண்டதாக அமைப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும்.