2017 ஆம் ஆண்டின் இந்தியாவின் மதிப்புமிக்க டாப் 50 பிராண்டுகளில் பட்டியலில் முதலிடத்தில் ஹெச்டிஎஃப்சி, அதைத் தொடர்ந்து ஏர்டெல் மற்றும் எஸ்பிஐ உள்ளது. ஜியோ பட்டியலில் 11வது இடத்தில் உள்ளது.

டாப் 50 பிராண்டுகள் – 2017

இந்தியளவில் அதிக மதிப்புமிக்க முதல் 50 பிராண்டுகள் பட்டியலை  BrandZ வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் வங்கி துறையைச் சேர்ந்த ஹெச்டிஎஃப்சி முதலிடத்தை பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி சுசூகி, பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.

இந்த பட்டியலில் இவ்வருடத்தில் 7 புதிய நிறுவனங்கள் இணைந்துள்ளது. அந்த நிறுவனங்களில் ஜியோ 11வது இடத்திலும், டி-மார்ட் (24), சன் டைரக்ட் (27), வேர்ல்பூல் (45), கனரா வங்கி (49) மற்றும் டிஸ் டிவி (50) ஆகியவை இணைந்துள்ளது.

இந்த சர்வே முடிவுகளில், கடந்த ஆண்டு பிராண்டு மதிப்புடன் ஒப்பீடுகையில் 21 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.