கதிர்வீச்சில் சியோமி மொபைல்கள் மிகவும் மோசமானவை..!

சீனாவின் சியோமி மற்றும் ஒன்பிளஸ் மொபைல் போன்கள் ஆபத்தான மொபைல் கதிர்வீச்சு வெளிப்படுத்துவதில் முன்னணியில் உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் மொபைல்கள் குறைந்த கதிர்வீச்சை வெளிபப்படுத்துகின்றது.

அதிகப்படியான கதிர்வீச்சுகளை வெளிப்படுத்தும் மொபைல்கள் மிகவும் ஆபத்தான புற்றுநோயை உருவாக்கும் என்பதனை அறிந்திருப்போம். அந்த வகையில் ஜெர்மனி நாட்டின் Statista மேற்கொண்ட ஆய்வில் சியோமி மற்றும் ஒன்பிளஸ் மொபைல்போன்கள் இடம்பிடித்துள்ளது. பிரசத்தி பெற்ற ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களும் உள்ளன.

அதிகபட்சமாக சியோமி நிறுவனத்தின் மி ஏ1 மொபைல் போன் சுமார் 1.74 watts per kilogram வெளிப்படுத்துகின்றது. இதனை தொடர்ந்து அதிகபட்சமாக ஒன்பிளஸ் 5டி 1.68 watts per kilogram கதிர்வீச்சை வெளிப்படுத்தி வருகின்றது.

கதிர்வீச்சில் சியோமி மொபைல்கள் மிகவும் மோசமானவை..!

குறைவான கதிர்வீச்சை வெளிப்படுத்தும் பட்டியலில் சாம்சங் பெரிய அளவில் இடம்பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து ZTE, மோட்டோரோலா மொபைல்கள் இடம்பெற்றுள்ளன. குறைந்தபட்ச அளவாக சாம்சங் கேலக்ஸி நோட் 8  0.17 watts per kilogram வெளிப்படுத்துகின்றது.

கதிர்வீச்சில் சியோமி மொபைல்கள் மிகவும் மோசமானவை..!