ஆகஸ்ட் 21ந் தேதி நிகழ உள்ள 99 ஆண்டுகளுக்கு பிறகு வரவுள்ள சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க இயலும் ? வெறும் கண்களால் முழு சூரிய கிரகனத்தை பார்க்கலாம் என்பதனை அறிந்து கொள்ளலாம்.

முழு சூரிய கிரகணம்

ஆகஸ்ட் 21ந் தேதி தொடங்க உள்ள முழு சூரிய கிரகணம் , இதற்கு முன்பு 99 ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியுள்ள நிலையில், தற்போது வரவுள்ள முழு சூரிய கிரகணம் எங்கே தெரியும், என அறிந்து கொள்ளலாம்.

முழு சூரிய கிரகணம் என்றால் என்ன ?

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள நீள் வட்டப்பாதையை நிலவு கடந்து செல்லும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும் இதனையே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகின்றது.

சூரியனை நிலவு  மறைக்கும் தன்மைக்கு ஏற்ப அதாவது முழுமையாக மறைத்தால் முழு கிரகணம், பகுதியாக மட்டும் மறைத்தால் பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகை பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

சூரிய கிரகணம் எங்கே தெரியும் ?

ஆகஸ்ட் 21ந் தேதி முதல் 22ந் தேதி வரை பல்வேறு பகுதிகளில் 30 கோடி மக்களால் பார்க்கும் வகையில் ஏற்பட உள்ள இந்த கிரகணம், ஐரோப்பா, வட கிழக்கு ஆசியா, வட மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகியவற்றில் முழுமையாக மற்றும் பகுதியாக சில இடங்களில் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும் ஆனால் தமிழகம் மற்றும் இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணத்தை பார்க்க இயலாது.

பார்க்கும் முறை

சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை கிரகணம் ஏற்படும் நிலையில், 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் கிரகண கண்ணாடி அணிந்து பார்ப்பதும் மிகவும் பாதுகாப்பற்றது. இதை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் இதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து அறிவியல் செய்திகளை படிக்க எங்களை பேஸ்புக்கில் தொடர fb.com/gadgetstamilan.com