மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

இந்திய தொலைத் தொடர்பு ஒழங்குமுறை ஆனையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் , விருப்பமான 100 டிவி சேனல்களை ரூ.153 கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வரும் என டிராய் தெரிவித்துள்ளது. டிவி சேனல்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது ? என அறிந்து கொள்ளலாம்.

100 டிவி சேனல்கள்

டிராய் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையிலான சேனல்களை மட்டும் பெறும் வகையில் புதிய திட்டத்தை பிப்ரவரி 1 முதல் செயற்படுத்த உள்ளதால், மக்கள் தங்கள் விருப்பமான சேனல்களை மட்டும் தேர்வு செய்ய டிடிஎச் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் அனுமதிக்க வேண்டும் என்பதனை கட்டாயமாக்க உள்ளது.

பயனாளர்கள் விருப்பமில்லாத சேனல்கள் பெரும்பாலும் அனைத்து டிடிஎச் மற்றும் கேபிள் ஆப்ரேட்டர்கள் வழங்குவதனை முற்றிலும் தடுத்து நிறுத்தும் நோக்கில் செயற்படுத்தப்பட உள்ள இந்த சேவையில் ஒவ்வொரு டிடிஎச் அல்லது கேபிள் டிவி பயனாளர்கள், குறைந்தபட்சம் 100 தொலைக்காட்சி சேனல்களை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ரூ.153.40 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் செலுத்த வேண்டும். இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ அல்லது கட்டண சேனல்களாகவோ இருக்கலாம். ஆனால் முதல் 100 சேனல்களுக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. அதேநேரம், இந்த குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் தெளிவாக பெற வழி வகுக்கும் ஹெச்.டி. தொழில்நுட்ப சேனல்களை பெற இயலாது.

மாதம் 100 டிவி சேனல்கள் ரூ.153 கட்டனம் : டிராய்

கூடுதல் அல்லது ஹெச்.டி. சேனல் கட்டனம் ரூ.19

மேலும் ஹெச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள் அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பெறலாம்.. இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என டிராய் உத்தரவிட்டுள்ளது.

எனவே நீங்கள் கூடுதலாக தேர்ந்தெடுக்கும் சேனல்களுக்கு அதிகபட்ச கட்டணம் ரூ.19 மட்டும்.

எவ்வாறு தேர்ந்தெடுப்பது ?

பிப்ரவரி 1 முதல் டிவி சேனல்களை தேர்ந்தெடுக்க 999 என்ற எண்ணில் பிரத்யேக சேனல் கிடைக்க தொடங்கும். இத சேனலில் ஒவ்வொரு சேனல்களுக்கும் கட்டண விபரம் வழங்க டிராய் உத்தரவிட்டுள்ளது.

புகார் மற்றும் சந்தேகங்கள்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சேனல் கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் டிடிஎச் மற்றும் கேபிள் டிவி பயனாளர்கள் 011-23237922 (A.k. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்கள் வாயிலாக தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2 (at) trai.gov.in, arvind (at) gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.

விருப்பமில்லாத சேனல்களை வாடிக்கையாளர்கள் இலகுவாக தவிர்க்கலாம். மேலும் டிராய் அறிவித்துள்ள புதிய விதிமுறையால் விருப்பமற்ற டிவி சேனல்களுக்கு கட்டனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது.