அமெரிக்காவின் 45வது அதிபராக செயல்பட்டு வரும் சர்ச்சைகளுக்கு பிரபலரான டொனால்ட் டிரம்ப் பயன்படுத்தி வருகின்ற ஐபோனில் ஒரே ஆப் மட்டுமே இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது.

டொனால்ட் டிரம்ப்

கடந்த சில மாதங்களுக்கு சாம்சங் கேலக்ஸி எஸ்3 மொபைலை பயன்படுத்தி வந்த டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னதாக ஐபோனுக்கு மாறினார்.

தற்பொழுது ஐபோனை பயன்படுத்தி வரும் டிரம்ப் தனது மொபைலில் ஒரே ஒரு செயலியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றார் என்ற தகவலை ஆக்ஸியோஸ் வெளியிட்டுள்ளது.இது என்ன ஆப் என்றால் உலக பிரபலங்களின் மிகவும் விருப்பமான டிவிட்டர் ஆப் மட்டுமே ஆகும். இதில் அமெரிக்கா அதிபரின் அதிகார்வப்பூர்வ கணக்கான POTUS மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றதாம்.

பாதுகாப்பு நலன் கருதி மொபைல் உள்பட பல்வேறு பயன்பாடுகளுக்கு அமெரிக்கா அதிபருக்கு மிகுந்த கட்டுப்பாடு உள்ளது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.