பிட்காயின் மோசடி: ட்விட்டரில் ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் கணக்குகள்

உலக அளவில் முன்னணியில் உள்ள பல்வேறு பிரபலங்களின் ட்விட்டர் கணக்குளை ஹேக் செய்து பிட்காயின் மோசடி செய்யப்படுவதனால் ட்விட்டர் நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆப்பிள், அமேசான் தலைவர் ஜெஃப், ஊபர், பராக் ஒபாமா எலான் மஸ்க், ஜோ பைடன் மற்றும் பில் கேட்ஸ் உள்ளிட்டவர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கிரிப்டோ கரன்சி என அழைக்கப்படுகின்ற பிட்காயின் ஊழலை மேற்கொள்ளுவதற்கு ட்விட்டரின் பிரபலங்களின் கணக்குகளை ஹேக் செய்து, மில்லியன் கணக்கான பின்தொடர்புவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்குவதாக போலியாக ட்விட் செய்துள்ளனர்.

பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டில், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் பக்கத்தில், வாழ்த்துக்கள் புதன்கிழமை..! என்னைப் பின்தொடர்பவர்கள் அனைவருக்கும் நான் பிட்காயினைத் திருப்பித் தருகிறேன். கீழே உள்ள பிட்காயின் முகவரிக்கு அனுப்பப்பட்ட அனைத்தும் இரட்டிப்பாக்குகிறேன். நீங்கள் 0.1 பி.டி.சியை அனுப்புகிறீர்கள், என்றால் நான் 0.2 பி.டி.சியை திருப்பி அனுப்புகிறேன்!”

இந்த சலுகை வெறும் “30 நிமிடங்களுக்கு மட்டுமே” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிட்காயின் மோசடி: ட்விட்டரில் ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் கணக்குகள்

குறிப்பாக ட்விட்டரில் உள்ள ப்ளூ டிக் சரிபார்ப்பு பெற்ற கணக்குகளில் மட்டும் இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து தற்காலிகமாக அனைத்து ப்ளூ டிக் சரிபார்ப்பில் உள்ள கணக்குகளில் பதிவுகளை வெளியிட தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ட்விட்டர் சிஇஓ ஜேக் கருத்து தெரிவித்துள்ளார். ட்விட்டருக்கு மிக கடினமான நாள் என குறிப்பிட்டுள்ளார்.

கிரிப்டோ கரன்ஸி பயன்பாட்டின் பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் பிளாக்செயின்.காம் கிட்டத்தட்ட $116,000 டாலர் மதிப்புள்ள மொத்தம் 12.58 பிட்காயின்கள், மோசடி ட்வீட்களில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.