மேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்

டுவிட்டர் லைட், டுவிட்டர் கற்று கொள்பவர்களுக்கான அப்ளிகேஷன் ஆகும், தற்போது இது 45 நாடுகளில் கிடைக்கிறது என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அப்ளிகேஷன்கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.

தற்போது இந்த அப்ளிகேஷன், இந்தியா, அர்ஜென்டீனா, கானா, துருக்கி, உக்ரேன், ஏமன் மற்றும் ஜிம்பாப்வே உள்பட 45 நாட்களில் கிடைக்கிறது. இதை பயன்படுத்த விரும்புபவர்கள் கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்

மேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்

இந்த அப்ளிகேஷன் 3MB அளவு கொண்டதாக இருப்பதோடு, 2G அல்லது 3G நெட்வொர்களிலும், வேகமாக தகவல்களை லோட் செய்யும். உங்களிடம் குறைந்த அளவிலான டேட்டா உள்ள நிலையில், எளிதாக தகவல்களை பெற புக்மார்க் வசதியும் இதில் உள்ளது. இதுமட்டுமின்றி நைட் மோடு, டிரேட்டட் டுவிட்கள் மற்றும் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புஷ் நோட்டிபிகேஷன் ஆகியவைகளும் உள்ளது.