யூசி பிரவுசர் உங்கள் தகவல்களை திருடி சீனாவுக்கு அனுப்புகின்றது

Ads

பிரசத்தி பெற்ற சீனாவின் அலிபாபா குழுமத்தின் யூசி பிரவுசர் தனிநபர் விபரங்களை சீனாவில் உள்ள ரிமோட் செர்வருக்கு அனுப்புவதனை அரசாங்க ஆய்வகம் கண்டறிந்துள்ளது.

யூசி பிரவுசர்

இந்திய சந்தையில் அமோக ஆதரவினை பெற்ற மொபைல் உலாவியாக உள்ள யூசி பிரவுசர் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் இந்தியளவில் மிக அதிகமாக தரவிறக்கப்பட்ட செயலியாகவும், 50 சதவிதிக இந்திய ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்படுகின்ற யூசி பிரவுசர் பயனாளரர்களின் தனிப்பட்ட விபரங்களை சீனாவில் உள்ள ரிமோட் செர்வருக்கு அனுப்புவதனை ஹைத்திராபாத்தில் உள்ள அராசங்க ஆய்வகம் இதனை கண்டறிந்துள்ளது.

உங்கள் மொபைல் இணையத்தை வை-ஃபை வாயிலாக இணைத்திருக்கும் போது IMSI (international mobile subscriber identity) மற்றும் IMEI (international mobile equipment identity) விபரங்களை சீனாவில் உள்ள செர்வருக்கு அணுப்புவதனை அரசு உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள பிசினஸ் ஸ்டாண்டர்டு தனிப்பட்ட தகவல்களை சீனாவில் உள்ள தனது செர்வருக்கு அனுப்புவதனால் விரைவில் யூசி பிரவுசர் மற்றும் நியூஸ் ஆகியவற்றின் மீது மத்திய அரசு ஒழுங்குமுறை நடவடிக்கையை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் மத்திய அரசு 21 மொபைல் தயாரிப்பாளர்களுக்கு தனிப்பட்ட தகவல்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றது என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை சீன மொபைல் நிறுவனங்கள் ஆகும்.

Comments

comments