யூசி பிரவுசர் தனிநபர் தகவல்களை சீன ரிமோட் செர்வருக்கு அனுப்புவதாக கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து யூசி பிரவுசருக்கு தடை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எச்சரிக்கை..! இந்தியாவில் யூசி பிரவுசருக்கு தடை விதிக்கப்படலாம்

யூசி பிரவுசர்

சமீபத்தில் மூத்த ஐடி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில் யூசி பிரவுசர் மொபைல் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை சீனாவில் உள்ள ஒரு ரிமோட் செர்வருக்கு அனுப்பி வருகின்றது. மேலும் பிரவுசரை அன்இன்ஸ்டால் செய்தாலும் அல்லது பிரவுசிங் தகவல்களை நீக்கினாலும் தொடர்ந்து பயனாளர்களின் DNS-யை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை..! இந்தியாவில் யூசி பிரவுசருக்கு தடை விதிக்கப்படலாம்

அலிபாபா குழுமத்தின் கீழ் செயல்படுகின்ற யூசி பிரவுசர் 100 மில்லியன் மாதந்திர பயனர்களை இந்திய அளவில் பெற்றிருக்கின்றது. இந்நிறுவனத்தின் கீழ் யூசி நியூஸ் செயலியும் கிடைத்து வருகின்றது. இந்த குழுமம் இந்தியாவில் ஒன்97 நிறுவனத்தின் பேடிஎம் நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதுடன் இ-காமர்ஸ் தளமான ஸ்னாப்டீல் தளத்திலும் முதலீடு செய்துள்ளது குறிப்பிடதக்கதாகும்.

Centre for Development of Advanced Computing (C-DAC) ஹைத்திராபாத் மையம் கண்டறிந்துள்ள நிலையில் டொரொண்டோ பல்கலைக்கழகமும் இதனை உறுதி செய்துள்ளது.

எச்சரிக்கை..! இந்தியாவில் யூசி பிரவுசருக்கு தடை விதிக்கப்படலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here