ஆதார் தகவலை தவறுதலாக பயன்படுத்திய ஏர்டெல் மீது நடவடிக்கைஇந்தியர்களின் அடையாளம் என மாறிவரும் ஆதார் எண் விபரத்தை  கொண்டு பயனாளர் அனுமதி இல்லாமல் ஏர்டெல் பேமெண்ட் வங்கி கணக்கினை தொடங்கிய காரணத்தால் இந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் பேமெண்ட் வங்கி

ஆதார் அடையாள எண் கொண்டு புதிய சிம் கார்டு வாங்கிய வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் 23 லட்சம் பயனாளர்களின் அனுமதி இல்லாமல் ஆதார் விபரங்களை கொண்டு பேமெண்ட் சார்ந்த வங்கி கணக்கை செயற்படுத்திய குற்றத்துக்காக ஏர்டெல் மீது  இந்நிறுவனத்தின் இ-கேஒய்சி (e-KYC -Electronic Know Your Customer) உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

23 லட்சம் பேரின் ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்ட உதவிகள் உட்பட பல்வேறு சேவைகளை பயன்படுத்த ஆதார் அடிப்படை அம்சமாக இணைக்கப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here