ஆப்பிள், அமேசான் சர்வர்களில் மைக்ரோ சிப்: வேவு பார்க்கிறது சீனா

ஆப்பிள் மற்றும் அமேசான்ஆகிய பெரிய அமெரிக்க நிறுவனங்களின் சர்வர்களில் மைக்ரோ சிப் ஒன்றை ரகசியமாகப் பொருத்தி சீன ராணுவம் வேவு பார்க்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் மற்றும் அமேசான் ஆகிய தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் ஒரு ட்ரில்லியனுக்கு மேல் பங்குகளுடன் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களாக உள்ளன.

இந்நிலையில், சீன ராணுவம் அந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் சர்வர்களில் மைக்ரோ சிப் (Microchip) ஒன்றை பொருத்தியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. சர்வர்களில் இருக்கும் மதர்போர்டுக்கு அடியில் மறைவாக இந்த சப் பொருத்தப்பட்டிருக்கிறது எனவும் ப்ளூம்பெர்க் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சூப்பர் மைக்ரோ என்ற அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்திடமிருந்து சர்வர்களை அமேசான் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. சூப்பர் மைக்ரோ நிறுவனத்தின் சர்வர்கள் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சீன ராணுவம் சூப்பர் மைக்ரோ நிறுவனம் தயாரிக்கும் சர்வர்களில் மைக்ரோ சிப்பை பொருத்தச் செய்கிறது என்று தகவல் தெரிவிக்கிறது.

இதன் மூலம் அந்த நிறுவனங்களைப் பற்றிய தகவல்களை எங்கிருந்து வேண்டுமானாலும் சீன ராணுவம் கையாள முடியும் எனவும் கூறப்படுகிறது.

Recommended For You