முகேசு அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் அங்கமாக செயல்படுகின்ற ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சேவையை தொடர்ந்து அடுத்தடுத்து ஜியோ டிடிஎச், ஜியோ பைபர் பிராட்பேண்ட் உட்பட மேலும் சில சேவைகளை வழங்க உள்ளது.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

 

ஜியோ புரட்சி

  • ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ள சேவை டிடிஎச் மற்றும் ஃபைபர் பிராட்பேண்ட் சேவை ஆகும்.
  • ரூ.1500 விலையில் நிகர மதிப்பு அடிப்படையில் இலவச 4ஜி ஜியோபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் சேவை 100 நகரங்களில் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வரவுள்ளது.

1. ஜியோ டிடிஎச்

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் 13 கோடி வாடிக்கையாளர்களுடன் மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ள ஜியோவின் அடுத்த அதிரடியாக இணைய தொடர்பு மற்றும் கேபிள் தொடர்பான சேனல்களை பெறும் வகையிலான ஹைபிரிட் செட்-டாப் பாக்ஸ் வகையை சார்ந்த டிடிஎச் சேவை வழங்க உள்ளது. அடுத்த 6 மாதங்களுக்குள் டிடிஎச் சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

 

2. ஜியோஃபைபர் பிராட்பேண்ட்

நொடிக்கு 1ஜிபி என்ற வேகத்தில் இணைய சேவையை வழங்கும் வகையில் டெல்லி, மும்பை, சென்னை மற்றும் புனே போன்ற நகரங்களில் சோதனை ஓட்டத்தில் உள்ள இந்த சேவையை முன்னணி 100 நகரங்களில் வருகின்ற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். இதனை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களுக்கு விரிவுப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. தற்பொழுது மேலே குறிப்பிடப்பட்ட சில நகரங்களில் ரூ.4500 பாதுகாப்பு வைப்பு நிதியை செலுத்தி 90 நாட்களுக்கான இலவச சேவையை பெறலாம்.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

 

3. ஜியோபோன்

ரிலையன்ஸ் ஜியோவின் லைஃப் பிராண்டில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்ற நிலையில் 4ஜி வோல்ட்இ ஜியோபோனில் ஜியோ ஆப்களில் கிடைக்கின்ற ம்யூசிக், டிவி, சாட்  உட்பட டிவியை இணைக்கும் வகையிலான போனாக ரூ.1500 விலையில் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

60 லட்சம் மொபைல் போன் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் இறுதி வாரத்தில் டெலிவரி தொடங்கப்பட்ட உள்ளது.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

 

4. டிஜிட்டல் ஹோம்

இல்லங்களில் பயன்படுத்தும் அம்சங்களை பெற்ற டிஜிட்டல் நுட்பங்களை பெற்று இயங்கும் வகையிலான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உள்பட க்ரோம்கேஸ்ட் ,ஃபயர் ஸ்டிக் போன்ற வசதிகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இதனை ஜியோ மீடியாஷேர் என்ற பெயரில் அழைக்கப்படலாம்.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

5. ஆர்ஜியோ பேமெண்ட் வங்கி

ஜியோ மணி ஆப் என்ற பெயரில் வழங்கப்பட்டு வருகின்ற இந்த சேவையை தற்பொழுது குறைந்தபட்ச அளவிலான வசதிகளே வழங்கப்பட்டு வருகின்றது. இதன் சேவையை அனைத்து பகுதிகளிலும் விரிவுப்படுத்தும் வகையிலான திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

அடுத்தடுத்து அதிர வைக்கும் ரிலையன்ஸ் ஜியோ புரட்சி

இதில் நீங்கள் எந்த சேவையை பயன்படுத்த ஆர்வமாக உள்ளீர்கள் என கமென்ட் பன்னுங்க….!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here