இந்தியாவில் நாளை சியோமி நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட உள்ள சியோமி மீ ஏ1 ஸ்மார்ட்போன் டூயல் கேமரா பற்றி பரவலாக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சியோமி டூயல் கேமரா மொபைல்

ஆரம்பத்தில் முதல் டீசரை இந்தியா சியோமி பிரிவு வெளியிட்ட பொழுது பலரின் எதிர்பார்ப்பு சியோமி 5எக்ஸ் மொபைலாக இருக்கலாம் என்ற அறியப்பட்ட நிலையில், சர்வதேச அறிமுகம் பிரத்தியேகமாக இந்தியாவிருந்து என வெளியிடப்பட்டுள்ளதால் நிச்சயமாக முற்றிலும் புதிய மாடலாக இருக்கும் என உறுதியாக எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்திய சந்தைக்கான பிரத்தியேகமான புதிய வரிசை மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் ஆண்ட்ராய்டு ஒன் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயக்கப்படலாம் எனவும் இந்த மொபைல் பெயர் சியோமி Mi A1 என்ற அழைக்கப்படலாம் என வும் கூறப்படுகின்றது.

சியோமி மி ஏ1 மொபைல்  2.02GHz ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 625 SoC சிப்செட் கொண்டு 4ஜிபி ரேம் பெற்றதாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

மேலதிக விபரங்கள் மற்றும் அதிகார்வப்பூர்வ தகவல்கள் அனைத்தும் நாளை வெளியாக உள்ள நிலையில் இந்த ஸ்மார்ட்போன் ஃபிளிப்கார்ட் வாயிலாக பிர்த்தியேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது.