விவோ OriginOS சிறப்பம்சங்கள் வெளியானது

விவோ ஸ்மார்ட்போன் தாயரிப்பாளரின் புதிய ஓஎஸ் தளமாக OriginOS என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்பாக புழக்கத்தில் இருக்கின்ற FuntouchOS -க்கு மாற்றாக வந்துள்ளது.

ஆண்டராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புதிய OriginOS இயங்குதளம், மிக சிறப்பான பயனர் அனுபவத்தினை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரிஜின் ஓஎஸ் முகப்புத் திரை சதுர மற்றும் செவ்வக விட்ஜெட்டுகளைப் பெற்றதாக விளங்குவதனை விவோ க்ளோட்ஸ்கி கட்டம் (Klotski grid) என்று அழைக்கிறது. புதிய OS மேம்பட்ட அனிமேஷன்கள், புதிய அறிவிப்பு அமைப்பு, ஒலி மற்றும் பிற விஷயங்களுடன் வருகிறது. விவோ புதிய ஓஎஸ் அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிவித்திருந்தாலும், உலகளவில் வெளியிடுவதற்கான உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.

ரேம் மற்றும் ரோம் செயல்பாடுகளில் மிகவும் அதிகப்படியாக கவனம் செலுத்தியுள்ளதால், மொபைல் போன் விரைவாக இயங்கும் வகையில் இந்த செயலி ஆதரிக்கின்றது.

புதிய இயங்குதளத்தை விவோ NEX , விவோ X வரிசை, ஐக்யூ மொபைல்களில் முதற்கட்டமாக அறிமுகம் செய்ய உள்ளது. மிக சிறப்பான வகையில் உருவாக்கப்படுடள்ள புதிய விவோ OriginOS இயங்குதளம் 200MB வரை மெமரி பயன்பாட்டை குறைப்பதுடன், 40 சதவீத கூடுதல் வேகத்தில் செயலிகளை திறக்க இயலும் என குறிப்பிட்டுள்ளது.

Web title : Vivo OriginOS Announced, Will Replace FuntouchOS