விவோ இந்தியா நிறுவனம், பிரத்தியேகமாக Z தலைமுறையினருகான விவோ Z1 ப்ரோ (Vivo Z1 Pro) ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளைவுடன், டிரிப்ள் கேமரா லென்ஸ்களை கொண்டதாக விற்பனைக்கு அடுத்த சில வாரங்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
முன்னணி பிளிப்கார்ட் இ-காமர்ஸ் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ள இசட்1 ப்ரோ மொபைல்கள் ஆன்லைனில் மட்டும் கிடைக்கும். ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் கொண்ட மாடல் 8ஜிபி ரேம் பெற்றதாக வெளியாகலாம்.
விவோ Z1 ப்ரோ சிறப்புகள்
1995 ஆம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவரகளை இசட் தலைமுறையினர் என அழைப்பதுன்டு, இவர்களை இலக்காக கொண்டு விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள விவோ இசட்1 ப்ரோ மாடலானது, சீன சந்தையில் விவோ Z5X என அறியப்படுகின்றது.
விவோ Z5X அடிப்படையில் விற்பனைக்கு வெளியாகும் பட்சத்தில் விவோ இசட்1 ப்ரோ மொபைல்ன் நுட்பம் பின் வருமாறு அமைந்திருக்கலாம். 6.53 முழு அங்குல ஹெச்டி பிளஸ் பஞ்ச் ஹோல் டிஸ்பிளேவுடன் ஸ்கீரின் பாடி டூ விகிதம் 90.77 சதவிகிதம் கொண்டிருப்பதுடன், ஸ்னாப்டிராகன் 710 சிப்செட் பெற்று 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாக அமைந்திருக்கலாம்.
பிரைமரி கேமரா ஆப்ஷனில் டிரிப்ள் கேமரா செட்டப் இடம்பெற்றிருக்கும். இதில் 16MP + 8MP + 2MP என மூன்று கேமராவுடனும், செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி சென்சார் பெற்றிருக்கும்.
ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டு FuntouchOS இயங்குதளத்தில் செயல்படுவதுடன் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியை கொண்டதாக வரவுள்ளது.