வோடாபோன் மற்றும் இன்டெக்ஸ் மொபைல் நிறுவனமும் இணைந்து ரூ.900 வரை கேஸ்பேக் சலுகை வழங்குவதாக அறிவித்துள்ளது. இன்டெக்ஸ் 2ஜி பீச்சர் போனுக்கு 50 சதவிதம் வரை கேஸ்பேக் ரூ.100 க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் வழங்குகின்றது.

வோடபோன் மற்றும் இன்டெக்ஸ்

வோடபோன் இந்தியா நிறுவனம் தொடர்ந்து 2ஜி ஃபீச்சர் போன் மாடல்களுக்கு ஐடெல், லாவா ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து சலுகை வழங்கி வரும் நிலையில், தற்போது இந்தியாவின் இன்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.100 மற்றும் அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் செய்யும் பயனாளர்களுக்கு 50 % அதாவது ரூ.50 வரை கேஸ்பேக் சலுகை வழங்குகின்றது.மொத்தமாக ரூ.900 வரை கேஸ்பேக் சலுகையை மாதந்தோறும் ரூ.50 என 18 மாதங்களுக்கு வழங்குகின்றது.

விற்பனையில் உள்ள இன்டெக்ஸ் 2ஜி பீச்சர் போன் மற்றும் பண்டிகை காலத்தில் வரவுள்ள பீச்சர் போன், சமீபத்தில் அறிமுகமான நவரத்தனா சீரிஸ் மொபைலுக்கும் இந்த சலுகை அக்டோபர் 31ந் தேதி வரை வழங்குகின்றது. கூடுதலாக , இன்டெக்ஸ் மொபைல் தயாரிப்பாளர் சிறப்பு சர்வீஸ் சலுகையாக அனைத்து 2ஜி பீச்சர் மொபைல்களுக்கு 180 நாட்கள் வரை ரீபிளேஸ்மென்ட் வாரண்டி சலுகையை வழங்க உள்ளது.