vodafone idea

இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் ஏற்பட்டுள்ள மிக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள வோடபோன் ஐடியா நிறுவனம், தனது ஏ.ஜி.ஆர் நிலுவைத் தொகையை சுய மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரூ.21,533 கோடியாக மதிப்பிட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் மதிப்பீட்டின் படி ரூ.53,000 கோடியாகும்.

இந்நிலையில் இதுவரை வோடபோன் ஐடியாவின் சார்பில் இரு தவனையாக ரூ.3,500 கோடி செலுத்தப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கட் கிழமை ரூ.3,500 கோடி செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

சமீபத்தில் வோடபோன் குழுமத்தின் தலைமை செய்ல் அதிகாரி நிக் ரீட் இந்தியா வந்துள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் மற்றும் தொலைத் தொர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து பேசியுள்ளார். இது பற்றி எந்த கருத்தையும் நிக் ரீட் கூறவில்லை. ஆனால் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கூறுகையில் இந்தியாவில் புதியதோர் அத்தியாயத்தை துவங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்திய அரசும் ஏகபோக ஒரு சில நிறுவனத்திற்கு சார்புடையதாக தொலைத் தொடர்பு துறை கொண்டு வருவதற்கான நோக்கம் இல்லை என உறுதியாக மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விரைவில் அனைத்து ஏஜிஆர் நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

வரும் மார்ச் 17 ம் தேதி, டெலிகாம் துறையின் கட்டணம் செலுத்தும் காலக்கெடுவைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தக் கோரி, தொலைபேசி நிறுவனங்கள் மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

வோடபோன் ஐடியா அடுத்த 3,500 கோடியை விரைவில் செலுத்த திட்டமிட்டுள்ளதால், செலுத்திய தொகை மொத்தமாக ரூ.7,000 கோடி ஆக இருக்கும். இந்நிலையில் இந்நிறுவன சுய மதிப்பீட்டு ரூ.21,533 கோடியாகும்.

பார்தி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் என இரு நிறுவனங்களும் தங்களுடைய சுய மதிப்பீட்டு கட்டணத்தை செலுத்தி உள்ளது.