3 ஆண்ட்ராய்டு 4K தொலைக்காட்சியை வெளியிட்ட வியூ டெலிவிஷன்ஸ்மும்பை மாநகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் வியூ டெலிவிஷன்ஸ் நிறுவனம், ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பின்பற்றி மூன்று 4K UHD ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

வியூ 4K ஆண்ட்ராய்டு டிவி

வியூ டெலிவிஷன்ஸ் சியோமி நிறுவனத்தின் மி டிவி 4 மற்றும் மி டிவி 4ஏ ஆகிய மாடல்களை எதிர்கொள்ளும் வகையில் 43 அங்குலம், 49 அங்குலம் மற்றும் 53 அங்குலம் என மூன்று விதமான அகலங்களை பெற்ற மூன்று தொலைக்காட்சிகளை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

மூன்று தொலைக்காட்சிகளும் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான டிவி 3840×2160 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக ஐபிஎஸ் பேனல்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட , இந்த டிவி மாடல்கள் க்ரோம் கேஸ்ட் வாயிலாக மொபைலில் பெறுவதனை  டிவிக்கு மாற்றும் வகையிலான அம்சங்களை பெற்று டால்பி ஆடியோ 10W ஸ்பீக்கர்களை கொண்டிருக்கின்றது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை பின்பற்றி குவாட் -கோர் பிராசெஸருடன், 2.5ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை பெற்று யூடியூப், ஃபேஸ்புக்,ஹாட்ஸ்டார், நெட்ஃபிளக்ஸ், சோனி லிவ் ,அல்ட் பாலாஜி ஆகியவற்றை இணைப்பாக பெற்று விளங்குகின்றது.

மேலும் இந்த தொலைக்காட்சியில் வாய்ஸ் செர்ச், வை-ஃபை, எதர்நெட், ப்ளூடூத், மூன்று ஹெச்டிஎம்ஐ போர்ட், இரண்டு USB 3.0, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை கொண்டுள்ளது.

Vu 43-inch – ரூ. 36,999

Vu 49-inch – ரூ 46,999

Vu 55-inch – ரூ 55,999