சில வாரங்களுக்கு முன்னதாக கணினிகளை கலங்க வைத்த வானாக்ரை போன்றதொரு ரேன்சம்வேர் ஆண்ட்ராய்டு மொபைல்களை தாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பெயர் வானாலாக்கர் என அறியப்படுகின்றது.

வானாலாக்கர்

வானா லாக்கர் எனப்படும் இந்த ரேன்சம்வேர் அதிக பயன்பாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை குறிவைத்து பணம் பறிக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக அவாஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வானா லாக்கர் ரேன்சம்வேர் ஆன்லைன் கேம் தளங்களின் ஃபோரம் பக்கங்களில் உள்ளதாகவும் இதனை தரவிறக்கம் செய்யும் பொழுது மொபைல் ஸ்கீரினை லாக் செய்து குறிப்பிட்ட பணத்தை செலுத்திய பின்னரே அனுமதிக்க முடியும் என்ற செய்தியை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது QQ, Alipay மற்றும் வீசாட் போன்றவற்றின் வாயிலாக பணத்தை செலுத்த வேண்டுகோள் விடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ஆண்ட்ராய்டு பயன்படுத்தும் பயனாளர்கள் அனுமதியற்ற தளங்களை பார்வையிடுவது, தரவிறக்கம் உள்பட போன்ற செயல்களில் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வானாக்ரை என்ற ரேன்சம்வேர் தாக்கியதில் 150க்கு மேற்பட்ட நாடுகளில் 3,00,000 மேற்பட்ட கணினிகள் பாதிப்படைந்தது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் அடங்கும்.