உலகை அச்சுறுத்தி வரும் வாணாக்கிரை ரான்சம்வேர் தாக்குதலுக்கு உலகளவில் 150 நாடுகளில் 3 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் 48 ஆயிரம் கணினிகள் பாதிக்கப்படிருப்பதாக நம்பப்படுகின்றது.

ரான்சம்வேர் வைரஸ்

கடந்த வெள்ளி முதல் உலகை அச்சுறுத்தி வருகின்ற ரான்சம்வேர் தாக்குதலால் மருத்துவமனை, தொலைதொடர்பு நிறுவனங்கள் , வாகன தயாரிப்பாளர்கள் முதல் சிறிய மளிகை கடை வரை தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.

உலகில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் இந்தியா முன்றாவது இடத்தில் உள்ளதாக குயூக் ஹீல் டெக்னாலாஜிஸ் தெரிவிக்கின்றது. இந்தியளவில் சுமார் 48,000 கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளதாக தெரிவிக்கின்றது.

முதற்கட்டமாக ஆந்திர மாநிலத்தில் 18 க்கு மேற்பட்ட காவல்துறை கணினிகளை தாக்கிய ரான்சம்வேர், வங்கிகளையும் தாக்கியுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றது. இது குறித்தான எந்த தகவலையும் ஆர்பிஜ வெளியிடவில்லை, ஆனால் நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து வெளிவருகின்ற செய்திகளின் அடிப்படையில் 350 க்கு மேற்பட்ட தனியார் வங்கிகளின் கணினிகள் தாக்குப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. முதலிடத்தில் ரஷ்யா மற்றும் அதனை தொடர்ந்து உக்ரைன் உள்ளது.