ஸ்மார்ட்போன் பயணர்களின் மத்தியில் அதிகம் பழக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் உண்மையிலே பாதுகாப்பானதா ? மிக சிறப்பான திடத்தை இந்த கொரில்லா கிளாஸ் பெறுவது எவ்வாறு  ? என அறிந்து கொள்ளலாம்.

கார்னிங் கொரில்லா கிளாஸ்

கார்னிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கொரில்லா கிளாஸ் சாதாரன கிளாஸ்களை காட்டிலும் மிக உறுதி தன்மை கொண்டதாகும் , மெல்லிதாக விளங்கினாலும் சிறப்பான பாதுகாப்பினை பெற்றதாகவும், கீறல்கள் தடுக்கும் திறனுடன் எளிதில் உடையாத தன்மையை பெற்றதாக விளங்குகின்றது.

  • 1960 ஆம் ஆண்டில் கார்னிங் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த கண்ணாடியின் உண்மையான பெயர் என்னவென்றால் கெம்கோர் (Chemcor)  ஆகும்.
  • ஆரம்ப காலங்களில் மிகவும் வலிமையான கண்ணாடியாக விளங்கினாலும் ரேஸ் கார்களில் பயன்படுத்தப்பட்டே வந்தது.
  • 2006 ஆம் ஆண்டில் ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்களை தொடர்பு கொண்ட கார்னிங் சிஇஓ வென்டெல் வீக்ஸ் முயற்சியில் முதன்முறையாக ஆப்பிள் ஐபோன்களில் ஸ்கிராட்ச்களை தடுக்கும் நோக்கயிலே இடம்பெற செய்தார்.
  • அதன் பிறகு பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் , கம்ப்யூட்டர் , லேப்டாப், தொலைக்காட்சி  மற்றும் பெரும்பாலான எலக்ட்ரானிக் கருவிகளில் கொரில்லா கண்ணாடி தனது பலத்தால் சந்தையை ஆக்கிரமித்தது.

கொரில்லா கண்ணாடி தயாரிப்பு முறை

சாதாரன கிளாஸ்களை காட்டிலும் கூடுதல் வலுமிக்க இந்த கிளாஸ்களில் அதிகப்படியான வேதிப்பொருட்களின் சேர்க்கையாலே கடினமைகின்றது. இந்த கிளாசில் அமைந்துள்ள alkali-aluminosilicate மிக சிறப்பான கடினதன்மைக்கு உதவிகரமானதாக அமைகின்றது.

கொரில்லா கிளாஸ் உடையுமா ?

நிச்சியமாக இந்த கண்ணாடி உடைக்கப்பட முடியும் ஆனால் மற்ற கண்ணாடிகளை போன்று விரைவாக உடைக்க முடியாது.

கொரில்லா கிளாஸ் நண்மைகள்
  • சாதாரன கிளாஸ் காட்டிலும் கூடுதல் பலம் வாயந்தது.
  • அதிக கடினதன்மை கொண்டது
  • ஸ்கிராட்சுகளை தாக்குபிடிக்கும்.
  • சாதாரன 10மிமீ தடிமன் கொண்ட கண்ணாடியை காட்டிலும் 2மிமீ கொரில்லா கண்ணாடி கடினமானதாகும்.

கொரில்லா கண்ணாடி தீமைகள்
  • அதிகப்படியான கெமிக்கல்
  • மிக கடினமான தயாரிப்பு முறை
  • இதன் தயாரிப்பு முறைக்கு அதிப்படியான ஆற்றல் தேவை

உலகயளவில் கோடிகணக்கான எலக்ட்ரானிக் கருவிகளில் இடம்பெற்றுள்ள கொரில்லா கண்ணாடி ஃபோர்டு  ஜிடி காரிலும் பயன்படுத்தப்படுகின்றது.

For more tamil tech news from GadgetsTamilan, like us on Facebook at facebook.com/gadgetstamilan and follow us on Twitter @gadgetstamilan