whatsapp news in tamil

பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தில், செய்தியை ஃபார்வோடிங் செய்தவர்களின் எண்ணிக்கை மற்றும் வாட்ஸ்ஆப் பிஸ்னஸ் செயலிக்கு வலைதள யூஆர்எல்-களின் ஷாட்லிங்க் வசதி போன்றவற்றை வாட்ஸ்அப் பெற உள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக வாட்ஸ்ஆப்பில் போலிச் செய்திகளை தடுக்க ரிவர்ஸ் இமேஜ் சர்ச், மற்றும் அபாயகரமான உள்ளடக்கங்களை கொண்ட வலைதளங்களை கண்டறிந்து எச்சரிக்கும் வகையிலான இன்-ஆப் பிரவுசர் வசதி போன்றவை அறிமுகம் செய்ய உள்ளதாக முன்பே நாம் குறிப்பிட்டிருந்தோம்.

வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்

வாட்ஸ்அப் ஃபார்வேடிங் மற்றும் ஷாட்லிங்க்

வாட்ஸ்ஆப்பில் தொடர்ந்து பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அடுத்ததாக , செய்திகளை பரிமாறிக் கொள்ளும் வகையிலான ஃபார்வோர்டு அம்சத்தில், ஃபார்வேர்டிங் இன்ஃபோ (Forwarding Info) மற்றும் தொடர்ச்சியான ஃபார்வேர்டெட் (Frequently Forwarded) என அழைக்கப்படுகிறது. பார்வேர்டிங் இன்ஃபோ என்ற அம்சத்தின் மூலம் நீங்கள் உங்களது நண்பர்களுக்கு அனுப்பிய தகவலை எத்தனை பேருக்கு ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மெசேஞ் இன்ஃபோ பகுதியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக வழங்கப்பட்டுள்ள Frequently Forwarded என்ற அம்சம் நான்கு அல்லது அதற்கும் அதிகமானோருக்கு ஃபார்வேர்டு செய்திருந்தால் பயனர் அனுப்பிய குறுந்தகவலில் பார்க்க முடியும்.

வாட்ஸ்அப் ஃபார்வேர்டு மெசேஜ், ஷாட்லிங்க் அப்டேட் விபரம்

அடுத்து ஆப்பிள் ஐஓஎஸ் பயனாளர்களுக்கான வணிக நோக்கத்திலான பிஸ்னஸ் செயலியில் ஷாட்லிங்க் வசதியை சோதனை செய்து வருகின்றது.

image source – wabetainfo