WhatsApp Dark Mode Spotted

WhatsApp Dark Mode Spotted | புதிய டிரென்டாக மாறி வரும் டார்க் மோட் தற்போது வாட்ஸ்அப் செயலில் இடம்பெற உள்ளது. பிரசத்தி பெற்ற வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் தளத்தில், தொடர்ந்து பல்வேறு மேம்பாடுகளை பேஸ்புக் நிறுவனம் வழங்கி வருகின்றது.

சமீபத்தில் ஃபார்வேடிங் இன்ஃபோ மற்றும் ஃபிரிக்யூன்ட்லி ஃபார்வோடிங் உள்ளிட்ட அம்சங்களுடன் இன் ஆப் பிரவுசர் உள்ளிட்ட வசதிகள் சோதனை செய்யப்பட்டு வருகின்றது.

வாட்ஸ்ஆப் டார்க் மோட் வருகை

ஃபேஸ்புக் நிறுவனமான வாட்ஸ்ஆப்பில் பல்வேறு வசதிகள் சோதனை செய்யப்படுவதனை வெளியிட்டு வரும் Wabetainfo இணையதளம் தற்போது டார்க் மோட் தொடர்பான விபரத்தை உறுதி செய்துள்ளது.

OLED திரைக்கு ஏற்றதாக அல்லாத முதல் டார்க் மோட் தொடர்பான சோதனையை 2.19.82 பீட்டா பதிப்பில் இந்நிறுவனம் சோதனை செய்து வருகின்றது. குறிப்பாக நேரடியாக டார்க் மோடானது டார்க் கிரே நிறத்தில் அமைந்திருக்கின்றது. முதற்கட்டமாக செட்டிங்ஸ் பகுதியில் கிடைக்க உள்ள இந்த டார்க் மோட் ஆனது, அறிவிக்கைகள், ஸ்டோரேஜ் ,டேட்டா சார்ந்த அமைப்புகளில் மட்டும் கிடடைக்கலாம்.

சமீபத்தில் போலிச் செய்திகளை தடுக்கும் நோக்கில், “Forwarding Info” மற்றும் “Frequently Forwarded”  எனும் அம்சத்தை சோதனை செய்து வருகின்றது.

image source – wabetainfo