whatsapp news in tamil

அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படுகின்ற வாட்ஸ்ஆப் செயலியில் கைரேகை மூலம் பாதுகாக்கும் வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கூடுதலான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துவது எப்படி என அறிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான நிறுவனம் இறுதியாக பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப் பயனர்களுக்கு மற்றவர்கள் தங்கள் செய்திகளைப் படிப்பதைத் தடுக்க கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யும். டச் ஐடி மற்றும் ஃபேஸ் ஐடிக்கான ஆதரவுடன் இந்த அம்சம் முதலில் iOS இயங்குதளத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடதக்கதாகும்.

கைரேகை லாக் எவ்வாறு செயல்படுத்துவது ?

வாட்ஸ்அப் “அமைப்புகள்” இல் உள்ள “கணக்கு” விருப்பத்தின் கீழ் உள்ள “தனியுரிமை”  என்ற பிரிவில் இந்த அம்சத்தை பெற்றுக் கொள்ளலாம். இதை வாட்ஸ்அப்பில் இயக்க, அமைப்புகள்> கணக்கு> தனியுரிமை> கைரேகை பூட்டுக்குச் செல்லவும். நீங்கள் வாட்ஸ்அப்பின் “கைரேகை பூட்டு” அம்சத்தை இயக்கினால், சேமிக்கப்பட்ட உங்கள் கைரேகையை அங்கீகரிக்கும்படி கேட்கும். பயன்பாட்டை “தானாக பூட்டுவதற்கு” மூன்று அம்சங்களுடன் இந்த அம்சம் வருகிறது. முதலாவது “உடனடியாக”, இரண்டாவது “1 நிமிடத்திற்குப் பிறகு”, மூன்றாவது “30 நிமிடங்களுக்குப் பிறகு” என வழங்கப்பட்டுள்ளது.

go to Settings > Account > Privacy > Fingerprint lock

WhatsApp-Android-Fingerprint-lock

வாட்ஸ்அப்பின் கைரேகை பூட்டு அம்சம் அழைப்புகளைத் தடுக்காது. செய்திகளின் உள் அம்சத்தை மட்டுமே மறைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அறிவிப்புகளில் செய்தி சூழல் மாதிரியை அல்லது முழுவதுமாக முடக்க பயனர்களை இந்த அம்சம் அனுமதிக்கிறது. இந்த ஆப்ஷனை பெற புதிய வாட்ஸ் ஆப் அப்டேட் செய்ய வேண்டும்.