whatsapp-business-app

ஆப்பிள் ஐபோனில் இயங்கும் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி குறிப்பிட்ட சில நாடுகளுக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வருடம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் வணிகரீதியான பிஸ்னஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

ஒரு வருடத்திற்கு மேலாக ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பயன்படுத்தி வந்த வணிக நோக்கத்திலான பிஸ்னஸ் செயலி, தற்போது மெக்சிக்கோ, பிரேசில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கிடைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலி

ஆண்ட்ராய்டு பயனாளர்கள் பயன்படுத்தி வரும் செயலியின் அம்சங்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டுள்ள ஆப்பிள் ஐஓஎஸ் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ள வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் பயனாளர்கள், தங்களின் வியாபார நோக்கத்திலான செயற்பாட்டுக்கு பயன்படுத்தலாம்.

வாட்ஸ் ஆப் பிஸ்னஸ் மூலம் வணிகம் செய்பவர்கள் தங்களது வாடிக்கையாளர்களுடன் தங்களது தயாரிப்புகள் மற்றும் இதர தகவல்களை இலகுவாக பகிர முடியும் வகையில் வடிவமைத்துள்ளனர். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் 5 மில்லியன் பயனர்களை கொண்டு செயல்படுகின்றது. ஆனால் ஆப்பிள் ஐபோனில் வாட்ஸ் ஆப் பிசினஸ் செயலி அறிமுகம் தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ தகவலும்  உறுதி செய்யப்படவில்லை.