பிரபலமான வாட்ஸ்ஆப் செயலியில், விளம்பரங்களை வழங்குவதற்கான திட்டம் தற்போது நீண்ட பரிசிலனைக்குப் பிறகு செயற்படுத்த உள்ளது. தற்போது வரை இலவசமாக வழங்கப்பட்டு வரும் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்களை வழங்க ஃபேஸ்புக் முடிவெடுத்துள்ளது.
அதிக பயனாளர்களால் பயன்படுத்தப்படுகின்ற இலவச மெசெஜிங் செயலியில் விளம்பரத்தை அனுமதிக்கும் வகையில் சோதனை செய்து வருவதாக WABetaInfo குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப்பில் விளம்பரம்
சமீபத்தில் நடைபெற்ற நெதர்லாந்தில் நடைபெற்ற ஃபேஸ்புக் நிறுவனத்தின் விளம்பரப்படுத்துதல் தொடர்பான கூட்டத்தில் வாட்ஸ்அப் விளம்பரம் செயற்படுத்தும் முயற்சி 2020 முதல் மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியில் வழங்கப்படும் 24 மணி நேரம் செயற்படுத்தப்படும் ஸ்டேட்ஸ் முறையில் டெக்ஸ்ட், படங்கள், வீடியோ, ஜீஃப் போன்றவை அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்டேட்ஸ் பகுதியில் இனி விளம்பரங்களும் வரவுள்ளது.
சோதனை செய்யப்பட்டு வரும் பீட்டா பதிப்பான 2.18.305 வெர்ஷனில் விளம்பரத்திற்கான சோதனை ஓட்டத்தை செயற்படுத்தி வருகின்றது. ஸ்டேட்ஸ் பகுதியில் தனது சொந்த ஃபேஸ்புக் விளம்பரத்தினை பயன்படுத்தும் திட்டத்தை செயற்படுத்துகின்றது.
வாட்ஸ்ஆப் உருவாக்கியவர்களில் ஒருவரான பிரெயின் ஏக்டன் கூறுகையில், விளம்பரம் செயற்படுத்தும் திட்டம் வருத்தம் அளிப்பதாக உள்ளது என ஃபோர்பஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.