சுயவிவர படத்தை பாதுகாக்க வாட்ஸ்ஆப்பில் புதிய அப்டேட்

வாட்ஸ்ஆப்பில் பல்வேறு மேம்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற நிலையில், சுயவிபர படங்களை ஷேர் செய்யும் ஆப்ஷனை அடுத்த அப்டேட் மூலம் நீக்க உள்ளதாக பீட்டா சோதனையின் வாயிலாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் இஸ்ரேல் சைபர் பாதுகாப்பு நிறுவனம் வாட்ஸ்ஆப் காலினை வேவு பார்க்கும் நுட்பத்தினை செயற்படுத்திய குறைபாட்டினை கண்டறிந்து அதற்கான மேம்பாடு வழங்கப்பட்ட நிலையில், பல்வேறு மேம்பாடுகள் தொடர்ந்து சோதனை செயப்பட்டு வருகின்றது.

அடுத்த வாட்சப் அப்டேட்

வாட்ஸ்ஆப்பில் சுயவிவர (Profile picture) படங்களை தரவிறக்கிக் கொள்ளும் வசதிக்கான பட்டனை அடுத்த அப்டேட்டில் நீக்கவுள்ளது, இந்த மாற்றம், வாட்ஸ்ஆப்பின் புதிய ஆண்ட்ராய்டு  அப்டேட்டில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு அப்டேட்டில் மற்றுமின்றி ஐபோன் அப்டேட்டிலும், இந்த வசதியை வழங்க உள்ளது.

இதன் காரணமாக ஒருவரின் சுயவிபர படங்களை ஷேர் செய்யவோ அல்லது தரவிறக்கம் செய்யவோ இனி இயலாது. இந்த அப்டேட் வெர்ஷன் 2.19.143 காண கிடைக்கின்றது.

சமீபத்தில் சோதனை நிலை பதிப்பில் 155 எமோஜிக்களை புதிப்பித்துள்ளது. மேலும் டார்க் மோடிற்கு பதிலாக நைட் மோட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.